31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்
பிறப்பு 21 MAR 1936
இறப்பு 10 JUN 2019
அமரர் கமலம் கந்தசாமி
இறந்த வயது 83
கமலம் கந்தசாமி 1936 - 2019 கொக்குவில் மேற்கு இலங்கை
Tribute 19 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். கொக்குவில் மேற்கைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் தாவடி தெற்கை வதிவிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கமலம் கந்தசாமி அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், அந்தியேட்டி அழைப்பிதழும்.

அம்மா... அம்மா... அம்மா...
என்ற சொல்லுக்கே ராணியம்மா நீ
ஒரு மாதம் கடந்தாலும் 
நீ பெற்ற ஆறு முத்துகளும்
கண்ணீரில் கரைகின்றோம் 
காலங்கள் கடந்தாலும்
கரையாது உன் நினைவுகள் அன்புத் தாயே!

எமது அன்புத் தெய்வம் இறையடி எய்திய செய்தி கேட்டு ஓடோடி வந்து துயரத்தில் பங்கு கொண்டு பல உதவிகள் புரிந்தோருக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தோருக்கும், கண்ணீர் அஞ்சலிகள் வெளியிட்டவர்களுக்கும், இறுதி நிகழ்வில் அஞ்சலி செலுத்திய அன்பர்களுக்கும் மற்றும் உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது இதயபூர்வமான நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

அன்னாரின் அந்தியேட்டிக்கிரியை 14-07-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று ந.ப 12:00 மணியளவில் Eraa Palace, 10 Karachi Dr, Markham, ON L3S 0B5, Canada எனும் முகவரியில் நடைபெறும் ஆத்மசாந்திப் பிரார்த்தனையிலும் அதனைத்தொடர்ந்து நடைபெறும் மதியபோசன நிகழ்விலும் அனைவரும் கலந்துகொள்ளுமாறு அன்புடன் அழைக்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

தேவன் - மகன்
விஜெய் - மகன்
நகுலன் - மகன்
தவம்(யோகாஸ்) - மருமகன்
சாந்தி - மகள்
ஜெயந்தி - மகள்
வசந்தி - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நெல்வயலும், ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles