Born 21 MAR 1936
Died 10 JUN 2019
Late Kamalam Kanthasamy
Age 83
Kamalam Kanthasamy 1936 - 2019 Kokkuvil West Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்த இடமும், நெல்வயலும், ஆல்,அரசு,வேம்பு என்பன சூழ்ந்துள்ளதும், பூசனி வெங்காய வயல்களுடன் வாழைத்தோட்டங்கள்,பயன்தருமரங்கள் என அழகிய மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த யாழ்ப்பாணத்தின் கொக்குவில் மேற்கில் 21/Mar/1936 இல் திரு திருமதி.பொன்னுத்துரை சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளாக கமலம் அவர்கள் கனகராசா, சண்முக சுந்தரம், மகாதேவன், மகேஸ்வரி, சிவலிங்கம், மலர், விஜயராஜா எனும் சகோதரங்களுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அன்பும் அறிவும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து  வளர்ந்து  பெரியவளானதும் திரு. திருமதி செல்லத்துரை சிவபாக்கியலட்சுமி தம்பதிகளின் அறிவு நிறைந்த ஆண் மகனான தபாலதிபர் செல்லத்துரை கந்தசாமி என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக தேவானந்தன், வித்தியா, விஜயானந்தன், நகுலானந்தன், ஜெயந்தி, நித்தியா போன்ற பிள்ளைகளைப் பெற்று கண்ணின் மணி போல் பாதுகாத்து வளர்த்து சாந்தரூபி, தவலிங்கம், நிர்மலா, சுலோஜனாதேவி, ஸ்ரீகாந்தன், நவநிதி போன்றவர்களை திருமணம் முடித்து வைத்து தனுஜா, சர்மினி, நிஷாந், கார்த்திகா, சோபிதா, பிரவிந், நிரோஷன், நிவேதன், தீபிகா, பிரியாந், பிரியங்கா, சுபாங்கி, சித்திராங்கி, சோபினி, சானியா, ஷாலினி போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                                

மேலும்  இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும்,  குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்  உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 10.06.2019 இல் 83 வயதில் கனடாவில் உள்ள Markham  நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"கொக்குவில் தந்த   
.......குல விளக்கே
இன்முகம் காட்டும்  
.......இனிய குணமே
வெள்ளை மனமே   
....... வள்ளல் உள்ளமே
பண்பை ஊட்டி  
.........பிரிந்து சென்றீரே"