பிரசுரிப்பு Contact Publisher
மண்ணில் 12 MAY 1955
விண்ணில் 07 MAY 2019
திரு விநாயகமூர்த்தி பாலச்சந்திரன்
வயது 63
விநாயகமூர்த்தி பாலச்சந்திரன் 1955 - 2019 நயினாதீவு இலங்கை

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த நயினாதீவு 8ஆம் வட்டாரத்தில்12/May/1955 இல் விநாயகமூர்த்தி மங்கையற்கரசி தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக பாலச்சந்திரன் அவர்கள் சபாநாதன், விக்கினேஸ்வரி, பங்கயவதனி, குபேரறதி போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர்  மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன், சுப்பிரமணியம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகள் விஜயலோஜினி  அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து  இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நிரஞ்சன், காருண்யா ஆகிய பிள்ளைகளை பெற்று பாதுகாத்து வளர்த்து மகிழ்வுற்று வாழ்ந்தார்.

மேலும் இவர் அன்புள்ளம் கொண்டவராகவும், இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்,  இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார், இவ்வாறு மனைவி,பிள்ளைகள், என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர்  07.05.2019 இல் 63 வயதில் ஜேர்மனியில் உள்ள Frankfurt am main நகரத்தில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

"நயினா தீவின்        
....நல்லுள்ளமே 
நன்நெறி தவறாது        
......வாழ்ந்த உறவே 
அன்பு உருவமே        
....அழகிய வதனமே 
அன்பைப் பிரிந்தோம்        
.... அகிலம் துறந்ததால் "