நன்றி நவிலல்
திருமதி விஜயகௌரி லக்ஸ்மணன் பிறப்பு : 21 JUL 1968 - இறப்பு : 16 DEC 2019 (வயது 51)
பிறந்த இடம் சுன்னாகம்
வாழ்ந்த இடம் Watford - United Kingdom
விஜயகௌரி லக்ஸ்மணன் 1968 - 2019 சுன்னாகம் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். சுன்னாகத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Watford ஐ வசிப்பிடமாகவும் கொண்ட விஜயகௌரி லக்ஸ்மணன் அவர்களின் நன்றி நவிலல்.

எங்கள் வீட்டு குலதெய்வமே
எங்களை எல்லாம் ஆறாத்துயரில் ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு
நாட்கள் 31 ஆனாலும்
உங்கள் நினைவுகள் என்றும்
எங்கள் நெஞ்சை விட்டகலாது!

உண்ணாமல் உறங்காமல் உனையிழந்து
ஓர் திங்கள் ஆனதுவோ...?
என்னே கொடுமையிது
இறைவனுக்கும் இதயமில்லை

உன் உயிரில் பாதி தந்தாய் அம்மா
நான் விடும் மூச்சிலே
உன் கருவறை வெப்பம் உணர்கின்றேன்
என் சிரிப்பினிலே
நீ பட்ட துன்பம் காண்கின்றேன்..

உங்கள் ஆத்மா சாந்தியடையப்
பிரார்த்திக்கின்றோம்!!

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு,  இல்லம் நாடி ஓடோடி வந்து கண்ணீர் சிந்தியவாறு எமக்கு ஒத்தாசைகள் புரிந்தவர்களுக்கும் ஆறுதலும், தேறுதலும் கூறிய அன்புள்ளங்கள் அனைவருக்கும், தொலைபேசி, அனுதாப அட்டைகள் மற்றும் சமூக வலைதளங்கள் மூலமாக அனுதாபம் தெரிவித்த உள்நாட்டு, வெளிநாட்டு உறவினர் நண்பர்கள் அனைவருக்கும், கண்ணீர் அஞ்சலி பிரசுரித்த அன்பர்களுக்கும், மலர்வளையம் வைத்து அஞ்சலி செய்தோருக்கும்,  மற்றும் இறுதிநிகழ்வில் கலந்துகொண்ட அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +447713214596

தொடர்புகளுக்கு

துஷி - மைத்துனி
கௌரிகாந்தன் - சகோதரர்
ரமணன் - மைத்துனர்
லக்ஸ்மணன் - கணவர்
நந்தினி - சகோதரி
கௌரிகரன் - சகோதரர்
Tribute 19 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.