1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 04 MAY 1921
இறப்பு 07 JUL 2019
அமரர் முருகேசு கணபதிப்பிள்ளை (வித்துவான்)
B.A (Cey) Dip in Tamil (Peredenia) Vidvan (Annamalai University), இளைப்பாறிய ஆசிரியர்- பருத்தித்துறை ஹாட்லிக் கல்லூரி, நெல்லியடி மத்திய மகா வித்தியாலயம், யாழ் இந்துக் கல்லூரி, நாவலப்பிட்டி கதிரேசன் கல்லூரி மற்றும் கொழும்பு சென்ற் செபஸ்தியன் கல்லூரி
இறந்த வயது 98
முருகேசு கணபதிப்பிள்ளை 1921 - 2019 அல்வாய் இலங்கை
Tribute 42 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். அல்வாயைப் பிறப்பிடமாகவும், பருத்தித்துறை, லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த முருகேசு கணபதிப்பிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எம் குடும்பத்தின் முத்தே ஐயா
எம் இதயத்து திருவிளக்கே
முத்து சறுக்கியதோ மகுடமுடி சாய்ந்ததுவோ
எம் இதயம் உங்கள் நினைப்பில்
எண்ணெய் இல்லா திரி ஆச்சே
ஆண்டு ஓன்று ஆனாலும்
ஆறாது எம் இதயம்

எங்கள் ஆருயிர் ஐயாவே !
எம் வாழ்வின் தென்றலே
பண்பின் உறைவிடமே
பாசத்தின் குலவிளக்கே
கனிவான உங்கள் பேச்சும்
பண்பான உங்கள் செயலும்
மறக்குமோ எங்கள் நெஞ்சைவிட்டு

எமக்கு துணையாய் ஆதரவாய்
சிறந்த வழிகாட்டியாய்
நீங்கள் என்றும் எம்முடன் வாழ்வீர்கள்!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்
!    

தகவல்: குடும்பத்தினர்
Life Story

இலங்கையின் அழகு நிறைந்த இடமும்,நன்கு படித்த மக்களைக் கொண்டதும்,வீரமும் எழுச்சியும் நிறைந்த மக்களாக விளங்குவதுடன், புகையிலைத் தோட்டம்,வெங்காய வயல்கள் மரக்கறித்... Read More

Photos

No Photos

View Similar profiles