மரண அறிவித்தல்
தோற்றம் 15 JUL 1939
மறைவு 15 OCT 2020
திரு வயித்திலிங்கம் இராசதுரை (சிவம்)
K.V.R - ஓய்வுபெற்ற இலங்கை போக்குவரத்துசபை சாலைப் பரிசோதனைப் பொறுப்பதிகாரி
வயது 81
வயித்திலிங்கம் இராசதுரை 1939 - 2020 கோப்பாய் தெற்கு இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோப்பாய் தெற்கு பழைய வீதியைப் பிறப்பிடமாகவும், சுன்னாகம் கே.கே எஸ் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட வயித்திலிங்கம் இராசதுரை அவர்கள் 15-10-2020 வியாழக்கிழமை அன்று காலமனார்.

அன்னார், காலஞ்சென்ற வயித்திலிங்கம், அன்னம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற திருமேனி, கனகம்மா தம்பதிகளின் பாசமிகு மருமகனும்,

பவளமணி அவர்களின் அன்புக் கணவரும்,

மைதிலி(தையல் போதனாசிரியர் கிழக்கு மாகாண கிராம அபிவிருத்தி திணைக்களம் பிரதேச செயலகம் காரைதீவு), ரேவதி(ஆசிரியை யா/யூனியன் கல்லூரி தெல்லிப்பளை, யா/ஏழாலை ஸ்ரீமுருகன் வித்தியாலயம்), வாசுகி(ஆசிரியை யா/தெல்லிப்பளை சைவப்பிரகாச வித்தியாலயம்) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான இரத்தினம், இராசம்மா, வேலுப்பிள்ளை(தவம்) மற்றும் நல்லையா(பவா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,

தவராஜா(பிரதம முகாமைத்துவ சேவை உத்தியோகத்தர் தொழில் திணைக்களம் கல்முனை), தர்மசீலன்(தீர்க்குழாய் பொருத்துனர்), ஹரிகரன்(ஆசிரியர் தெல்லிப்பளை யூனியன் கல்லூரி) ஆகியோரின் பாசமிகு மாமனாரும்,

காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம், கோகிலமணி மற்றும் துரைசிங்கம்(இத்தாலி), மனோன்மணி, துரைராஜா(ஜேர்மனி), தர்மராஜா ஜெயமணி ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சுதன்(பவளம்கடை, ஐயனார் ஸ்ரோர் உரிமையாளர்) அவர்களின் சிறிய தந்தையும்,

சபரீசன், விபுதன்(மாணவர்கள் யா/ யூனியன் கல்லூரி), சகானுஜா(மாணவி யா/உடுவில் மகளிர் கல்லூரி), முகிலாசன் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-10-2020 வெள்ளிக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கொத்தியாலடி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

த.தவராஜா - மருமகன்
த.தர்மசீலன் - மருமகன்
து.ஹரிகரன் - மருமகன்

Photos

No Photos

View Similar profiles