Born 06 SEP 1928
Died 14 MAY 2019
Mrs Francisca Savarimuthu
Age 90
Francisca Savarimuthu 1928 - 2019 Avanam Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் அழகு நிறைந்ததும் படித்தவர்களைக் கொண்டதும், மிகத் தொன்றுதொட்டு முக்கியம் பெற்ற இடமும்,பனைமரங்கள்,கால்நடை வளர்ப்பு, நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த மன்னார் ஆவணத்தைப் பகுதியில் செபமாலை அடைக்கலம் தம்பதிகளுக்கு  அன்பு மகளாக பிரான்சிஸ்கா அவர்கள் 06/Sep/1928 ஆம் ஆண்டில் இவ் அவனியில் வேதநாயகம் எனும் உடன் பிறப்புடன் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர்  குறும்புகள் செய்து  வளர்ந்து  பெரியவளானதும்  அழகு நிறைந்த ஆண் மகனான தொம்மை சவிரிமுத்து என்பவரைத் திருமணம் முடித்து மகிழ்வுற்று வாழ்ந்ததன் பயனாக செபமாலை தவமணி, றோஸ்மேரி, வெற்றிநாயகம், எலிசபேத், மரியநாயகம், அந்தோனிப்பிள்ளை, றீற்றா, குணசீலன், ஜோண்போல், றொபின், அருட்சகோதரி பிரியசாந்தி, ஜேம்ஸ் கிறிஸ்ரிராசா  போன்ற பிள்ளைகளை பெற்று  வளர்த்து இன்புற்று வாழ்ந்தார்.

மேலும்  இவர் இறைவன் மீது அசையாத பக்தி கொண்டு பிள்ளைகளுக்கு பக்தியை ஊட்டி வளர்த்ததுடன்,ஆண்டவன் பணிசெய்ய ஒரு பிள்ளையை ஆசையாக அற்பணித்தவர். எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், அமைதியும் சாந்தமும் பொறுமையும் குறையாக் கருணையும் மன்னிப்பும் கொண்டு விளங்கினார்.அத்துடன் வருத்தம் ஏற்படும் காலத்தில் வைத்தியராகவும் மன வருத்தம் ஏற்படும் போது ஆறுதல் தந்து உருகிய உயரிய உறவு சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராகவும்,  குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்ததுடன் இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரிந்தார். இவ்வாறு  பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளைகள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 14.05.2019 இல் 90 வயதில் மன்னாரில் உள்ள ஆவணத்தையில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

ஆவணம் தந்த                
......ஆருயிர் தெய்வமே
அன்புப் பாதை காட்டிய                
......அசையா உறவே
அமைதி மனமும்                
...... அசையா பக்தியும்
ஆசை உறவே