31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
தோற்றம் 17 SEP 1934
மறைவு 18 AUG 2020
அமரர் ஐயாக்குட்டி நவரத்தினம்
ஓய்வுபெற்ற உதவி அரசாங்க அதிபர்- செட்டிகுளம்
இறந்த வயது 85
ஐயாக்குட்டி நவரத்தினம் 1934 - 2020 இளவாலை இலங்கை
Tribute 3 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். இளவாலையைப் பிறப்பிடமாகவும், ஓட்டுமடத்தை வசிப்பிடமாவும் கொண்டிருந்த ஐயாக்குட்டி நவரத்தினம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு
கூறும் ஆறுதல் வார்த்தைகளாலும்
அனைவரையும் கவர்ந்தீரே! 

நெஞ்சில் உம் நினைவுகளை சுமந்தே
நெடுங்காலம் நாம் இங்கே நிலைத்து வாழ்வோமே!
வானில் விண்மீனாய் இருந்து
எம் வாழ்வை வளப்படுத்துவீரே!

மனம் என்றும் ஆறாத்துயரோடு
மீளாத் துயில் கொண்ட உங்கள்
ஆத்மா சாந்தி அடைய
எங்கள் இருகண்ணீர் மலர் தூவி
இறைவனோடு இணைய வேண்டி
அஞ்சலி செய்கின்றோம்......!!!

என்றும் உங்கள் நீங்காத நினைவுடன்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்.  

எமது தந்தையின் மறைவுச்செய்தியை கேட்டு நேரில் வந்தும், மற்றும் தொலைபேசியில் தொடர்பு கொண்டும் அனுதாபங்களை தெரிவித்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றியை தெரிவித்துக்கொள்கிறோம்.தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

இந்து - மகள்
ஜெயம் - மருமகன்
மோகன் - மகன்
குரு - மகன்
புனிதா - மருமகள்

Summary

Photos

No Photos

View Similar profiles