Born 15 FEB 1933
Rest 22 MAY 2020
Mr Kanthapillai Sithamparapillai
Age 87
Kanthapillai Sithamparapillai 1933 - 2020 Puthukudiyiruppu Sri Lanka
Tribute
பிரார்த்திக்கின்றோம்
கல்வியில் மூத்தோனானாய்
கலங்கரை விளக்குமானாய்
அலைகடலில் தவித்த எம்மை
கரைசேர்த்த படகுமானாய் -கல்வியில்
எறாமல் நின்ற எம்மைஎற்றிவிட்ட ஏணியானாய்
அகரம் சொல்லி உகரம் சொல்லி அதில்
உள்ள நயமும் சொன்னாயாய்
எதுகை சொல்லி மோனை சொல்லி -எதிலும் ஏறும் துணிவும் தந்தாய்
லகரம் சொல்லி ழகரம் சொல்லி
இன்பத்தமிழை இனிக்கத்தந்தாய்
புளியங்கொட்டையில் புதுக்கணக்கெடுத்து
புளியடிக்கணக்கோடு புதுவேகம் தொடரவைத்தாய்
ஆக்கம் தந்தாய் ஊக்கம் தந்தாய்
அறம் புறம் விளங்க வைத்தாய்
கோயில் தந்து பள்ளிக்கூடம் தந்து
கோடிட்ட வாழ்வும் தந்தாய்
சமயத்தில் பற்றும் தந்து சமயோசித புத்தி தந்து-சிலசமயத்தில் அழவும் வைத்தாய்
எல்லாம் எமக்கு தந்தாய்-இன்று மட்டும்
எம்மைவிட்டு ஏங்கே சென்றாய்???
எம்மண்ணில் பிறந்து எம்போன்றவர்களை கல்வியில் முன்னேறவைத்து ஒரு ஆசானுக்கு இலக்கணமாக திகழ்ந்து எம்மைவிட்டு பிரிந்த எம்மதிப்புமிகு ஆசானின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
உங்கள் பிரிவால் துயர் உற்று இருக்கும் அனைவருக்கும் ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவிக்கின்றோம்

உங்கள் அன்பு மாணவர்கள்
ஓம் சாந்தி.
Write Tribute