நன்றி நவிலல்
திருமதி நல்லையா பொன்னம்மா பிறப்பு : 04 DEC 1928 - இறப்பு : 10 OCT 2019 (வயது 90)
வாழ்ந்த இடம் வெள்ளவத்தை
நல்லையா பொன்னம்மா 1928 - 2019 புங்குடுதீவு 5ம் வட்டாரம் இலங்கை
நன்றி நவிலல்

யாழ். புங்குடுதீவு 5ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், கொழும்பு வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட நல்லையா பொன்னம்மா அவர்களின் நன்றி நவிலல்.

எம்மை இந்த உலகிற்கு தர தன்னை இழந்து
தினம் தினம் ஊனின்றி உறக்கமின்றி எம்மை ஒரு
உயிராக்கி தானே சுமந்து இருள் சூழ்ந்த எம்மை
வெளியுலகம் காண நீ கொண்ட வலியால் அய்யோ
அம்மா என்றோயே எம்மை கண்ட அக்கணம் நீ
கொண்ட வலிகள் நிறைவற்று போனதோ உன்
முகத்தில் புன்னகை மட்டும் தவழ்ந்ததே

கண்கள் இல்லாமல் ரசித்தேன்
காற்று இல்லாமல் சுவாசித்தேன்
வார்த்தை இல்லாமல் பேசினேன்
கவலை இல்லாமல் வாழ்ந்தேன்
எம் தாயின் கருவறையில் மட்டும்

காயங்கள்  ஆறிப்போகும்!
கற்பனை மாறிப்போகும்!
கனவுகள் களைந்துபோகும்
ஆனால் என்றுமே மாறாமல் இருப்பது
உன் பாசம் மட்டுமே
உங்கள் பிரிவால் வாடும் பிள்ளைகள்.

அன்னாரின் மறைவுச் செய்தி கேட்டு நேரில் வந்தும், வெளியூர், வெளிநாடுகளில் இருந்து தொலைபேசி வழியாக தொடர்புகொண்டும் எம் துயரில் பங்குகொண்டோர் மற்றும் இணையத்தளங்கள் வழியாக ஆறுதல் தெரிவித்தோர், கண்ணீர் அஞ்சலிகள் பிரசுரித்தோர், இறுதி நிகழ்வுகளில் பங்குகொண்டோர், மலர்வளையங்கள் வைத்தோர், மலர் அஞ்சலிகள் செலுத்தியோர்,  ஆறுதல் தெரிவித்தோர், மற்றும் பலவழிகளிலும் உதவி புரிந்த அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.

இங்ஙனம், குடும்பத்தினர் +41344312963
Tribute 7 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

கண்ணீர் அஞ்சலிகள்