32ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 01 JAN 1970
இறப்பு 21 OCT 1988
அமரர் நடராசா சசிவண்ணன்
இறந்த வயது 18
நடராசா சசிவண்ணன் 1970 - 1988 புங்குடுதீவு 3ம் வட்டாரம் இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 3ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், மருதனார்மடத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த நடராசா சசிவண்ணன் அவர்களின் 32ம் ஆண்டு நினைவஞ்சலி.

எங்கள் அன்புச் செல்வமே ரவி...
எங்களோடு நீண்ட நெடுநாட்கள்
வாழ்வாய் என்றும் எங்களுக்கு
பக்கபலமாய் இருப்பாய் என்றிருந்தோம்!

கண்ணிமைக்கும் நொடிப் பொழுதினில்
கயவர்களின் குண்டு பட்டு உன்
உயிர் பறிக்கப் பட்டதேனோ?..

ஆண்டுகள் பல ஓடி மறைந்தாலும்
உம் நினைவு என்றென்றும்
எம்மனதில் நிறைந்திருக்கும்...
காலங்கள் விடை பெறலாம் ஆனாலும்
கண்முன்னே நிழலாடும் உம் நினைவுகள்
பல ஆண்டுகள் சென்றாலும் எம் உயிர் உள்ளவரை
உம் நினைவில் வாழ்ந்து கொண்டிருப்போம்!

சிப்பிக்குள் முத்தாய் அன்னையின் கருவறையில்
இப்புவியில் உதித்த செங்கதிர் சுடரே

அம்மா அம்மா என்று
பட்டாம் பூச்சிபோல் சுத்தி திரிந்த நீ
உன் அம்மாவை தவிக்க விட்டு எங்கே போனாயடா?

உன்னை இன்நிலைக்கு ஆளாக்கியது
வஞ்சகர்கள் செய்த சதியோ?
இல்லை  இறைவனின் விதியோ?

கண் இமைக்கும் நேரத்தில் காலன்
உனை கவர்ந்த வேளை காவலனாய்
நாமில்லை கதி கலங்கி நிற்கின்றோம்!

கடல் அலை போலஉன் ஞாபகங்கள்
என்னை சுற்றுகிறது
உன் பயணம் முடிந்ததோ??

நிலா இல்லாத வானமாய் போனதே
உன் பிரிவை தாங்காத என் நெஞ்சம்
இப்போது எங்கே போவேன்...

கண்ணில் சிந்தும் கண்ணீர்
உன்னிடம் சொல்ல நினைப்பதை
சொல்லாமல் தவிக்கிறேன் தம்பி

அக்கா அக்கா என்று கூப்பிட்ட நீ
இப்போது எங்கே?
உன்னை எங்கே தேடுவேன்??

எம் நினைவிலும் செயலிலும் என்றும் நீயே ரவி...
உமது ஆத்மா சாந்தியடைய நாங்கள் எல்லோரும்
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.


தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles