மரண அறிவித்தல்
பிறப்பு 04 MAY 1928
இறப்பு 14 SEP 2020
திருமதி செல்வத்துரை பஞ்சாட்சரம் (பஞ்சாட்சர அக்கா)
பருத்தித்துறை மெதடிஸ் பெண்கள் உயர்தரப்பாடசாலை மாணவியும், ஆசிரியையும்
வயது 92
செல்வத்துரை பஞ்சாட்சரம் 1928 - 2020  துன்னாலை தெற்கு இலங்கை
Tribute 15 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். துன்னாலை தெற்கு கொற்றை உடையார் பகுதியைப் பிறப்பிடமாகவும், திருகோணமலை, மட்டக்களப்பு, காலி, மன்னார், கொழும்பு ஆகிய இடங்களை வாழ்விடமாகவும் கொண்ட செல்வத்துரை பஞ்சாட்சரம் அவர்கள் 14-09-2020 திங்கட்கிழமை அன்று துன்னாலையில் இயற்கை எய்தினார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சின்னையா பத்தினிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மகளும், வல்லிபுரம்(வைத்தியர்) பத்தினி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற செல்வத்துரை(Customs Officer) அவர்களின் அன்பு மனைவியும்,

செல்வகுமாரன்(தொழில்நுட்பவியலாளர்– Elector and Mechanical- நோர்வே), காலஞ்சென்றவர்களான கோபாலகுமாரன்(பிரதம சிறாப்பர்), சிவகுமாரன் மற்றும் நந்தகுமாரன்(வங்கி முகாமையாளர்- NSB), பஞ்சகுமாரன்(முன்னாள் பேராதனை வளாக பொறியியல் பீட விரிவுரையாளர்- Consulting Civil and Structural Engineer, அவுஸ்திரேலியா), பவளராணி(ஆசிரியை- திரு இருதய கல்லூரி கரவெட்டி) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

சுலோசனாதேவி, பத்மா, நாமகள் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சரஸ்வதி, துரைச்சாமி(பிரதம தபாலதிபர்), இராசையா(கூட்டுறவு பரிசோதகர், சட்ட விரிவுரையாளர், நீதவான், ACCD) மற்றும் வீரசிங்கம்(பதிவாளர்- நீதிமன்றம்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

விக்னகுமாரன், இறைகுமாரன், கரப்பிரியா, தேனிக்கா, தர்மிக்கா, இலக்கியா, தமன்யா ஆகியோரின் அன்பு அப்பம்மாவும்,

 நாவேந்தன் அவர்களின் அன்பு அம்மம்மாவும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 15-09-2020 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் பிட்டிது இந்து மயானதில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

நந்தன் - மகன்
பவளராணி - மகள்
நீபன் - பேரன்
பஞ்சகுமாரன் - மகன்
செல்வகுமாரன் - மகன்
வதனி - மருமகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ். துன்னாலை தெற்கு கொற்ற உடையார் குடும்பத்தினைப் பிறப்பிடமாகவும், நெல்வயல், பனை, தென்னை, பலா, வாழை ஆகிய வளங்களிற்கு உரித்துடைய சின்னையா- பத்தினிப்பிள்ளை... Read More

Photos

View Similar profiles