கண்ணீர் அஞ்சலி
பூவுலகில் 16 JUN 1981
விண்ணுலகில் 12 APR 2019
திரு மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ்
பொறியியலாளர்
இறந்த வயது 37
மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ் 1981 - 2019 மன்னார் இலங்கை
Tribute 13 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

மன்னார் எமில் நகரைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரிய தோமஸ் அன்ரன் கொன்சலஸ் அவர்கள் 12-04-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

நண்பர்களாக பல்கலைக் கழகத்தில் இணைந்தோம்
பல கலைகளை ஒன்றாக கற்றோம்,
நண்பர்களாக சுற்றித்திரிந்தோம் பல்கலைகழகம் சிறியதாய் தெரிந்தது
நம் நட்புறவில்
மகிழ்ச்சியாய் நாழிகை பல கடந்தன
உன் சிரிப்பூட்டலில் மட்டுமே நண்பா,
உன் நினைவுகளை வாழ்வில் மறந்திட எம்மால் இயலாதடா நண்பா,
நினைத்து பார்த்தால் துயரம் மட்டுமே பெருமலை போல்....
இன்று நீ மட்டும் தனியாக எம்மை விட்டு போக நினைத்தது ஏனடா! 
நண்பா விடை தெரியாமல் விம்மி விம்மி அழுகின்றோம் - நீயின்றி
தாங்க முடியவில்லையடா- தவிக்கிறோம்
போய்வாடா நண்பா...

எமது உயிர்த்தோழனின் பிரிவால் துயருற்று இருக்கும் உற்றார் உறவினர் நண்பர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்கள்.  நண்பனின்  ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்.

இப்படிக்கு அழுத விழிகளுடன் மொறட்டுவை பல்கலைக்கழக நண்பர்கள் (2002/2003 வருடம்).

தகவல்: நண்பர்கள்

தொடர்புகளுக்கு

Nimal - Brother
Rimosan - Friend

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

இலங்கைத் தீவின் அழகும் தொன்மையும் நிறைந்த  புனித பூமியும் பிரசித்தி பெற்ற ஆலயங்கள் அமைந்துள்ளதும், வரலாற்றுக் காலங்களில் மிக முக்கிய இடமுமான எழில்... Read More

Photos

No Photos