Born 17 SEP 1932
Died 11 JUN 2019
Mr Vinayagasundaram Sivasamy (சுந்தரநாதன், சுந்தரி)
Age 86
Vinayagasundaram Sivasamy 1932 - 2019 Thondaimanaru Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தில் மிக அழகு நிறைந்த இடமான வடமராட்சி வடக்கில் வடக்கே பெருங்கடலும் தெற்கே தொண்டமனாறு கடல் நீரேரியும் சூழ்ந்து குளிர்ச்சி தருவதுடன், பிரசித்தி பெற்ற செல்வச்சந்நிதி முருகன் அருள் பாலிக்கும் இடமான  தொண்டமனாற்றில் 17/SEP/1932 ஆம் ஆண்டில்  பரியாரியார் சிவசாமி உமாதேவி தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.வினாயகசுந்தரம் அவர்கள்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                                        

அத்துடன் அழகும் நிறைந்த இவர் தங்கவேலாயுதம், மகமாசி அம்மா, கமலாதேவி, ஆனந்தவேல் போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து அழகிய தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் சிவாலிங்கம் தங்கமணி தம்பதிகளின் அன்பு மகள் பங்கையர்செல்வம் என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து தங்கலஷ்சுமி, ஜெயலஷ்சுமி, வியிஜலஷ்சுமி, குமரநாதன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும் சுந்தரி என அன்புடன் அழைக்கப்படும் இவர் நண்பர்களுடன் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும், பழைய இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்   நிறைந்தவராக  விளங்கினார். இவ்வாறு  பிள்ளைகள், நண்பர்கள் என மகிழ்வுடன் வாழ்ந்த இவர்  11.06.2019 இல் 86 வயதில் பெரிய கடற்கரை தொண்டைமானாற்றில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.      

”குல விளக்கே எங்கள்        
கோவில் சிலையே     
குங்கும நிறமே எமது            
குல தெய்வமே    
பங்க குணமற்ற இனிய            
பாச உறவே    
எங்கள் தங்கமே நீங்கள்            
எங்கே போனீரே”