31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்
பிறப்பு 17 JUN 1932
இறப்பு 24 DEC 2020
அமரர் பகவதி பாக்கியம்
இறந்த வயது 88
பகவதி பாக்கியம் 1932 - 2020 பரந்தன் குமரபுரம் இலங்கை
Tribute 13 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கிளிநொச்சி பரந்தன் குமரபுரத்தைப் பிறப்பிடமாகவும், இலங்கை, கனடா Toronto ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த பகவதி பாக்கியம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

எம் அருமை அம்மாவே உங்களைப் பிரிந்து
31 நாட்கள் கடந்து விட்டனவே !

உங்கள் பாதச் சுவடுகள்
பதிந்த இடம் மறையவில்லை
கண்ணீரின் ஈரமதும்
எங்கள் கன்னத்தில் காயவில்லை!

எங்கள் தாயே!!! ஆறாது ஆறாது
அழுதாலும் தீராது எம் தாயே!!!

இமைப் பொழுதில் காலன் உம்மைக்
கவர்ந்துவிட்டான் இக் கணமும் உங்கள்
நினைவால் கலங்குகின்றோம் அம்மா 

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.

அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், தொலைநகல், மின்னஞ்சல், சமூக வலைதளங்கள் ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்றுவரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.  

அன்னாரின் அந்தியேட்டி கிரிகை 21-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப 06:00 நடைபெற்று பின்னர் 21-01-2021 வியாழக்கிழமை அன்று மு.ப  07:00 துடக்கு கழிப்பு நடைபெறும்.


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ராசையா
ஜெயலக்சுமி - மகள்
மீனாட்சி
நடராஜா
குணம் - மகன்
ராசநாதன் - மகன்
பத்மாவதி - மகள்
தேவி - மகள்
ரதிமலர் - மகள்
மீரா - மகள்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

View Similar profiles