மரண அறிவித்தல்
தோற்றம் 15 DEC 1929
மறைவு 10 MAY 2019
திரு சதாசிவம் மாணிக்கவாசகர்
ஓய்வுபெற்ற உப அதிபர்- வேலணை கிழக்கு மகாவித்தியாலயம், அகில இலங்கை சமாதான நீதவான்
வயது 89
சதாசிவம் மாணிக்கவாசகர் 1929 - 2019 வேலணை 2ம் வட்டாரம் இலங்கை
Tribute 39 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். வேலணை கிழக்கு 2ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும், தற்போது கொழும்பு- 06 வெள்ளவத்தையை வதிவிடமாகவும் கொண்ட சதாசிவம் மாணிக்கவாசகர் அவர்கள் 10-05-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான சதாசிவம் மாரிமுத்துத் தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான தம்பிப்பிள்ளை இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

சிவபாக்கியம்(ஓய்வுபெற்ற அதிபர்- வேலணை கிழக்கு மகாவித்தியாலயம்) அவர்களின் அன்புக் கணவரும்,

வைத்தியகலாநிதி இளந்திரையன்(நோர்வே), இளஞ்செழியன்(மேல் நீதிமன்ற நீதிபதி- திருகோணமலை), சிவகெளரி(கனடா), இளம்பிறையன்(விரிவுரையாளர்- யாழ் பல்கலைக்கழகம்), இளங்குமரன்(கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான சண்முகம், கைலாயபிள்ளை மற்றும் கமலாதேவி, மூத்ததம்பி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

திருமதி இளந்திரையன், லலிதா ராணி, ஸ்ரீ கிருஷ்ணராஜா, சிவசக்தி, ஜெயஸ்ரீ ஆகியோரின் அன்பு மாமனாரும்,

அன்னலட்சுமி, காலஞ்சென்றவர்களான  பகவதி, திருநாவுக்கரசு, கணபதிப்பிள்ளை மற்றும் சிதம்பரநாதன், சித்திரவேல், கைலாயநாதன், காலஞ்சென்ற முருகானந்தம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

நதியா, சந்தியா, சிந்தியா, ஜொனத்தன், அபிமன்யு, கடோற் கஜன், ரிஷி, வைஷாலி, பிரியங்கா, ராகுல், லக்‌ஷான், ஓவியா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

அன்னாரின் பூதவுடல் பொறளை ஜெயரட்ண மலர்ச்சாலையில் 12-05-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:00 மணிமுதல் பி.ப 08 :00 மணிவரை அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, 13-05-2019 திங்கட்கிழமை அன்று கேணியடி கொக்குவில் மேற்கு கொக்குவில் எனும் முகவரியில் உள்ள இல்லத்தில் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு 14-05-2019 செவ்வாய்க்கிழமை அன்று மு.ப 08:00 மணியளவில் இறுதிக்கிரியை நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் வேலணை சாட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: இளஞ்செழியன், இளம்பிறையன்

தொடர்புகளுக்கு

இளம்பிறையன் - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,படித்த மக்களை அதிகம் கொண்டதும் கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள்... Read More

Photos

No Photos

View Similar profiles