பிரசுரிப்பு Contact Publisher
பிறப்பு 07 DEC 1939
இறப்பு 13 MAY 2019
திரு கந்தர் வைரமுத்து
இளைப்பாறிய அதிபர், முன்னாள் பணிப்பாளர் பனம்பொருள் அபிவிருத்திச்சபை
வயது 79
கந்தர் வைரமுத்து 1939 - 2019 மட்டுவில் இலங்கை

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின்  அழகு நிறைந்த தென்மராட்சியில் படித்தவர்களைக் கொண்டதும்,நிழல் தரும் மரங்கள் நிறைந்து காணப்படும் இடமும்,பிரபலமான அம்மன் அருள்பாலிக்கும் இடமும், தெங்கு தோட்டம், நெல்வயல்,வெங்காய வயல்கள் மரக்கறித் தோட்டம்,புகையிலைத் தோட்டம்,பயன்தருமரங்கள் என அழகு நிறைந்த சாவகச்சேரி மட்டுவிலில்07/DEC/1939 இல் கந்தர் தங்கம்மா தம்பதிகளுக்கு அன்புப் புதல்வனாக வைரமுத்து அவர்கள் இவ் அழகு நிறைந்த ஊரில் அவதரித்தார்.

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர்  மெல்ல மெல்ல வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன்  ரஷீனா அவர்களுடன் திருமண பந்தத்தில் இணைந்து  இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து நக்கீரன், நெடுமாறன், செந்தூரன், டொறினா, துசியந்தி, மீரா ஆகிய அற்புத பிள்ளைகளை ஈன்றெடுத்து பாதுகாத்து வளர்த்ததுடன்,சிவயோகராணி, சர்வினி, சிவரூபி, ஜெகராசா, சுகந்தன், ஸ்ரீஸ்கந்தராசா போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது கடமையை சிறப்புற செய்ததுடன் பிரணன், அபிரன், அபினன், சகானா, ஹரிஷ், விஷ்ணு,  அபிராமி, அகத்தியா, தக் ஷரா, பவித், துசன், சேனன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.

மேலும்  இவர் ஆசிரியராகவும்,அதிபராகவும் கடமையாற்றி இளைப்பாறியதுடன்,பனம் பொருள் அபிவிருத்திச்சபையின் பணிப்பாளராகவும் கடமையாற்றியதுடன் வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பொறுமைசாலியும் நிறைந்தவராக விளங்கினார்,  இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு மனைவி,பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர்  13.05.2019 இல் 79 வயதில் கொழும்பில்  உள்ள வெள்ளவத்தையில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

மட்டுவில் மண்ணின்      
  ......மங்காத ஒளியே
மாசற்ற உறவே     
.......நேச உள்ளமே
அறிவுக் கடலே     
.....அழகிய ஆசானே
ஆதவற்று தவிக்கும்     
.......அருமை உறவுகள்