1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 07 JUL 1927
இறப்பு 20 JAN 2020
அமரர் ருக்மணி குணரத்தினம் (நாகேஸ்வரி)
இறந்த வயது 92
ருக்மணி குணரத்தினம் 1927 - 2020 கொய்யாத்தோட்டம் இலங்கை
Tribute 45 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கொய்யாத்தோட்டத்தைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்ட ருக்மணி குணரத்தினம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் போனதம்மா
ஆறவில்லை பிரிவின் துயரம்
நீங்கள் இல்லா உலகமதில்
வாசல் இலா வீடானோம்- தாயே!

இறைவனில்லா கோயிலாக
பிறையில்லா வானமாக
திசையில்லா படகாக
திகைக்குதம்மா உன் குடும்பம்! 

துயரம் துடைத்த தூயவளே!
இன்பம் இழைத்த இனியவளே!
பாசம் பழக்கிய பனிமலரே- இனி
எங்களுக்கு உனைப்போல் யார் உளர்?..!

ஓய்ந்துவிட்ட ஓவியமே!
கரைந்துவிட்ட காவியமே!
வளர முடியாத வளர்பிறையே!
வருவாயா? மறுபடியும் எம் தாயே!

உங்கள் ஆத்மா சாந்திபெற
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்..    


தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles

  • Shanmugam Balasundram Ampan, France View Profile
  • Vinasithamby Paramalingam Thanniiroottu, Mulliyavalai, Kanukkeny, London - United Kingdom View Profile
  • Emmanuel Robinson Koiyathoddam, Munster - Germany View Profile
  • Jesuthasan Jemes Sinnarajah Koiyathoddam, Pandiyanthalvu View Profile