20ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 03 OCT 1941
இறப்பு 28 JUN 2000
அமரர் மனோன்மணி நவீனச்சந்திரன் (சரஸ்)
ஓய்வுபெற்ற மருத்துவ ஆய்வுகூடப் பொறுப்பாளர்- கிறீன் ஞாபகார்த்த வைத்தியசாலை, மானிப்பாய்(1965-1985)
இறந்த வயது 58
மனோன்மணி நவீனச்சந்திரன் 1941 - 2000 வேலணை கிழக்கு இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். வேலணை கிழக்கைப் பிறப்பிடமாகவும்,  மானிப்பாய், பிரான்ஸ் ஆகிய இடங்களை வசிப்பிடமாக கொண்ட மனோன்மணி நவீனச்சந்திரன் அவர்களின் 20ம் ஆண்டு நினைவஞ்சலி.   

நேற்றுப் போல இருக்கின்றதே,
உனை நாம் இழந்து
அம்மா!
இருபதா ஆண்டுகள்?
இறையே எம் கருக்கூடே..
தொடர்ந்து நாம் வாழ்வது, கருஞ்சுழிக் காலங்களா?

அம்மா
சாய்ந்திட நாம், உன் தோள்கள் எங்கே?
கொஞ்சிட பேத்திகள், உன் கன்னங்கள் எங்கே?
கூத்தாட பேரன்கள், உன் மடி எங்கே?

கூடப் பிறந்தவர்கள் மயங்கிய உன் அன்பு எங்கே?
சொந்தங்கள் தடவிய உன் நாடி எங்கே?
உற்றார் ஆறிடும் உன் மனை எங்கே?
உறவினர் உருகிய உன் பாசம் எங்கே?
நண்பர்கள் நெகிழ்ந்திடும் உன் சிரிப்பு எங்கே?
மருமக்கள் கேட்டிடும் உன் அறிவுரை எங்கே?
பெறாமக்கள் பாராட்டும் உன் கரிசனை எங்கே?
மாற்றாரும் மதித்திடும் உன் பண்பு எங்கே?
எம் தோழர்களும் போற்றிடும் உன் அரவணைப்பு எங்கே?

அணுவாய், ஆற்றலாய், நிதம் கொஞ்சும் எம் குஞ்சுகளாய்!
வருவாய் கணம், எம்முள் வந்து போகும் சுவாசமாய்!
தமிழாய், நிதமாய் நீங்கமற வீசும் வளியாய்! வாழ்வாய் எம்முள்!

மறுபடிப்படியாய் உன் மடி பிறக்க தருவாய் வரம் என்றும் அருளி அருளி!

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

N Niruban (Niru) - Son
N Sanjeyan (Sanjey) - Son
N Navatheepan (Kanna) - Son
M Ganesh - Son
R Nagatharsini (Tharsini) - Daughter

Photos

No Photos

View Similar profiles