Born 06 JUN 1932
Died 03 SEP 2019
Mrs Ambalavanar Rasamanee
Age 87
Ambalavanar Rasamanee 1932 - 2019 Pungudutivu 3rd Ward Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் நான்கு பக்கமும் கடல் அலை தாலாட்டும் அழகிய தீவும், படித்து கல்வியறிவு கூடிய மக்களாக விளங்குவதும் கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு என அழகு நிறைந்த புங்குடுதீவில் 06/JUN/1932 இல் திரு.திருமதி இராமலிங்கம் பொன்னாச்சி தம்பதிகளின் அன்பு மகளாய் இராசமணி அவர்கள் பசுபதிப்பிள்ளை பாக்கியம், பொன்னுத்துரை, சற்குணம் எனுன் உடன்பிறப்புடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து  வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி தம்பையா தங்கம்மா தம்பதிகளின் அழகிய ஆண் அழகான அம்பலவாணர் அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக பாலச்சந்திரன், திருச்செல்வம், பாலசரஸ்வதி, பிறேமசாந்தி, கோபாலகிருஷ்னன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து ஜெயசீலி, லலிதாம்பாள், நாகேந்திரராஜா, சிவனேஸ்வரன் போன்றோரை திருமணம் முடித்து வைத்து சர்மிலன், பவித்திரன், துவாரகா, டிஷாந்த், வர்மிதா, பார்த்திபன், பத்மகௌரி, காண்டீபன், ஜவிதா, சர்மிலி, பிரதிகா, ஹரிஷன் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், ஷஸ்மிகா எனும் பூட்டப்பிள்ளையுடனும் நிறைந்த மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                             

மேலும்  எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும், சிற்றுண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர் அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.                                          

இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை, உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 03.09.2019 இல் 87 வயதில் பிரான்ஸில் உள்ள Bagneux நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.    

அலை இசையில் அவதரித்த உறவே
மலையாய் உயர்ந்து மனிதநேயம் கொண்டு
கலை போல் அழகுற விளங்கிய
கருனை மனமே கலங்கி நிற்க
எங்கே போனீர் எங்கள் உயிரே.