மரண அறிவித்தல்
தோற்றம் 04 FEB 1948
மறைவு 12 JUN 2019
திரு நா. வை. குகராசா (மணி அண்ணா)
சமாதான நீதிவான், மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், மேனாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ குமுகத் தொண்டர்
வயது 71
நா. வை. குகராசா 1948 - 2019 நெடுந்தீவு இலங்கை
Tribute 28 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நெடுந்தீவைப் பிறப்பிடமாகவும், கிளிநொச்சி எள்ளுக்காடு சக்திபுரத்தை வசிப்பிடமாகவும், வவுனியா ஓமந்தை வேப்பங்குளத்தை தற்போதைய வதிவிடமாகவும் கொண்ட நா. வை. குகராசா அவர்கள் 12-06-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான இராமநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

லலிதாதேவி(போதனா ஆசிரியை- ஓய்வு கால்நடை திணைக்களம்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஓவியா(ஆசிரியை- பயிலுனர் மகாவலி தேசியக் கல்வியற் கல்லூரி), நித்திலன்(ஊவா வெல்லஸ்ஸ பல்கலைக்கழகம்- பதுளை) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

மகேந்திரராசா(குமரிவேந்தன்- ஓய்வுபெற்ற மின்பொறியியல், கண்காணிப்பாளர்), காலஞ்சென்ற அரியராசா(தொலைத் தொடர்பு பரிசோதகர்), பரமராசா(மேனாள் முகாமையாளர் பாற்சபை- கிளிநொச்சி, கனடா), புவனேந்திரராசா கோணேஸ்வரி, சிறில் சாந்தீஸ்வரி ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

பசுபதி புஸ்பவதி, காலஞ்சென்றவர்களான சுந்தரலிங்கம் கனகம்மா, அருளப்பு யோகம்மா(ஓய்வுபெற்ற ஆசிரியர்), கோபால்(காவல்துறை அதிகாரி) மற்றும் வரதராசா சேதுப்பிள்ளை(ஓய்வுபெற்ற ஆசிரியை-கனடா), சிவஞானசுந்தரம் பார்வதி, பேரம்பலம்(ஓய்வுபெற்ற கணக்காய்வாளர்- கனடா), துரைராசா(மேனாள் பள்ளி முதல்வர்), குலசிங்கம் புவனேஸ்வரி(ஓய்வுபெற்ற ஆசிரியர்), மகேந்திரராசா புனிதலீலாவதி, பரமராசா பவானி, காலஞ்சென்ற கந்தையா புவனேந்திரராசா மற்றும் வஸ்தியாம்பிள்ளை சிறில் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.

அன்னாரின் இறுதி நிகழ்வு 16-06-2019 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 08:30 மணியளவில் இல.677, செல்வாநகர்(கனகபுரம் மாவீரர் துயிலிமில்லத்திற்கு அருகில்) அமைந்துள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று, அதனைத் தொடர்ந்து மு.ப 09:30 மணியளவில் கரைச்சி தெற்கு பல நோக்கு கூட்டுறவுச் சங்கத்தில் மலர் அஞ்சலிக்காக வைக்கப்பட்டு, மு.ப 10:00 மணியளவில் கரைச்சி பிரதேச சபையில் நினைவஞ்சலி நிகழ்வு நடைபெற்று பின்னர் திருநகர் பொது மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

லலிதாதேவி - மனைவி
நித்திலன் - மகன்
ஒவியா - மகள்
மகேந்திரராசா - சகோதரர்
பரமராசா - சகோதரர்
கோணேஸ் - சகோதரி
சாந்தி - சகோதரி
யெகன் - பெறாமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், பெரிய தீவும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த... Read More

Photos

No Photos

View Similar profiles