Born 04 FEB 1948
Died 12 JUN 2019
Mr N. V. Kugarasa (மணி அண்ணா)
சமாதான நீதிவான், மேனாள் கரைச்சி பிரதேச சபை தவிசாளர், மேனாள் கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவர், கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ சமுகத் தொண்டர்
Age 71
N. V. Kugarasa 1948 - 2019 Neduntivu Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், பெரிய தீவும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த நெடுந்தீவில் 04/FEB/1948 ஆம் ஆண்டில் திரு.திருமதி வைத்திலிங்கம் நாகமுத்து தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.நா.வை.குகராசா அவர்கள்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                                        

அத்துடன் அழகும் நிறைந்த இவர் மகேந்திரராசா, அரியராசா, பரமராசா, புவனேந்திரராசா கோணேஸ்வரி, சிறில் சாந்தீஸ்வரி போன்ற உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து வளர்ந்து அழகிய தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி இராமநாதர் சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகளான கால்நடை திணைக்கள போதனா ஆசிரியை லலிதாதேவி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து ஓவியா, நித்திலன் எனும் அருமையான பிள்ளையைப் பெற்று மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும் இவர் சமாதான நீதிவானாகவும், கரைச்சி பிரதேசசபை தவிசாளராகவும், கரைச்சி தெற்கு கூட்டுறவு சங்கத் தலைவராகவும் செயலாற்றியதுடன், 50 ஆண்டுகளுக்கு மேலான தன்னார்வ குமுகத் தோண்டராகவும் செயற்பட்டவர். வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்   நிறைந்தவராக  விளங்கினார். இவ்வாறு மனைவி, பிள்ளைகள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர்  12.06.2019 இல் 71 வயதில் கிளிநொச்சியில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.      

நெடுந்தீவின் முத்தே மனதில்           
நிலைத்திடும் சொத்தே     
கடுகளவும் துஞ்சாத               
கடமை வீரனே     
படு பகைவர் செயலை            
பாசமாக ஏற்று     
சுடுசொல் தவிர்த்து             
சுமைதாங்கி ஆனீரே