Born 12 FEB 1984
Died 03 AUG 2019
Mrs Shanmuganathan Thavanithy
Age 35
Shanmuganathan Thavanithy 1984 - 2019 Karainagar Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,படித்த மக்களைக் கொண்டதும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு ,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள், என அழகு நிறைந்த ஈழத்து சிதம்பரம் அமைந்த இடமான காரைநகரில் 12/FEB/1984 இல் திரு.திருமதி கதிரவேலு விஜயலட்சுமி தம்பதிகளின் அருமை மகளாய் தவநிதி  அவர்கள்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் தயாநிதி எனும் உடன்பிறப்புடன் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி குமாரவேலு வேலுப்பிள்ளை பொன்னம்மா தம்பதிகளின் அன்பு மகனான சண்முகநாதன் என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக நேசினி, நிரோஷன் எனும் அன்புப் பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து  மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                              

மேலும்  எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், சுவையான உணவுகள் செய்வதும்,சிற்றூண்டி செய்வதிலும் கைதேர்ந்தவராக விளங்கிய இவர்  அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார். இவ்வாறு கணவன், பிள்ளைகள், உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர்03.08.2019 இல் 35 வயதில் பிரித்தானியாவில் உள்ள Wembley நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.

இளமை வாழ்வில்  எமைப் பிரிந்து
வழமை அன்பை  இழந்து தவிக்கவிட்ட
கள்ளம் அற்ற  கனிவு உள்ளமே
வெள்ளை மனம்  வெதும்பி நோக
பள்ள இதயம்   நொருங்கி உடைந்ததே