மரண அறிவித்தல்
கண்மகிழ 01 FEB 1977
கண்நெகிழ 12 MAY 2020
திரு இராசையா உதயகுமார் (லஷ்மணன்)
வயது 43
இராசையா உதயகுமார் 1977 - 2020 கோவில் போரதீவு இலங்கை
Tribute 7 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

தென் தமிழீழம் மட்டக்களப்பு கோவில் போரதீவைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா Liverpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட இராசையா உதயகுமார் அவர்கள் 12-05-2020 செவ்வாய்க்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான இராசையா வள்ளியம்மை மணயிணையரின் அன்பு மகனும், தங்கவேல் அன்னலெட்சுமி தம்பதிகளின் அன்பு மருமகனும்,

குணஸ்வரி(லண்டன்) அவர்களின் அன்புக் கணவரும்,

ஷார்ஜன்(லண்டன்), வாணுசன்(லண்டன்), சுவிசன்(லண்டன்) ஆகியோரின் அன்பு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான துரைசிங்கம், உதயகுமார் மற்றும் பாலச்சந்திரன்(லண்டன்), காலஞ்சென்றவர்களான வரதராஜா, பாலகுமார் மற்றும் புவனேஸ்வரி, காலஞ்சென்ற சந்திரமதி ஆகியோரின் பாசமிகு சகோதரரும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம். 

நிழழ்போல் இருந்தவன் நீ
நினைவாய் மாறினாய்!
கண் இமைக்கும் நேரத்தில்
கண்ணீர் துளியாகினாய்!!

இதயங்களெல்லாம் நொறுங்க
இமைகளெல்லாம் நனைய
எங்களை தவிக்கவிட்டு
எங்கோ நீ பயணமானாய்!!

நான்கு வருட நம் நட்புக்குள்
ஏழு ஜென்ம பந்தம்!
நட்ப்பென்ற ஒன்றுக்குள்
நாம் சேர்ந்து நின்றோம்..!!

நான் உன்னை சந்தித்திருக்காவிட்டால்
நண்பனுக்காக எதையும் செய்யும்
நண்பன் ஒருவன்
எனக்கு கிடைத்திருக்கமாட்டான்!

நீ எங்களை விட்டு தூரத்திலில்லை
நினைவுகளில் இருக்கிறாய்!!
எங்கும் போகவில்லை நீ
எங்கள் இதயங்களில் வாழ்கிறாய் 

என்றாவது ஒருநாள்
எங்கோ ஓரிடத்தில்
நாம் சந்தித்துக் கொள்வோம்..!
நாம் நட்புக்கு என்று 

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

கிரியை Get Direction
நல்லடக்கம் Get Direction
மதிய போசனம் Get Direction
  • Tuesday, 26 May 2020 12:00 PM
  • 63 Clare Rd, Bootle L20 9LZ, UK

தொடர்புகளுக்கு

தபேசன் - மருமகன்
யனு - பெறாமகன்

Summary

Photos

View Similar profiles

  • Kanthanathan Thambiayya Urelu, Liverpool - United Kingdom View Profile
  • Nadarajah Thangavel Kurumpasiddy, Netherlands, Liverpool - United Kingdom View Profile
  • Rasathiamma Gnanapragasam Nallur, Stanmore - United Kingdom View Profile
  • Somasuntharam Kaneshalingam Malaysia, Singapore, Mathagal East View Profile