Born 22 DEC 1928
Rest 08 NOV 2019
Mr Peter Manuelpillai
Age 90
Peter Manuelpillai 1928 - 2019 Jaffna Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசை யாழ்ப்பாணத்தில்  22/DEC/1928 ஆம் ஆண்டில் திரு.திருமதி மனுவல்பிள்ளை சிசிலியா தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.பீற்றர் அவர்கள் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                                           

அத்துடன் சிறுவயதில் அன்பும் பண்பும் கொண்டு எட்வேட், பூமணி போன்ற சகோதரங்களுடன் தவழ்ந்து வளர்ந்து வாழ்வில் உயர்ந்ததுடன் திரேசம்மா என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோஷமாகவும் வாழ்ந்து வந்தனர்.                                             இருவரின் இன்ப வாழ்க்கையின் பயனாக ஜெசிந்தா, அசந்தா, உதயன் போன்ற பிள்ளைகளைப் பெற்று வளர்த்து புனிதா, சாமிலா என்பவர்கருக்கு திருமணம் முடித்து வைத்து கிறிஸ்ரினா, ஸ்ரிவன், சிந்தியா, ஜெசிக்கா, அன்ரனி எனும் பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும் அன்பும் பண்பும் கொண்ட  இவர் நகைச்சுவையாக பேசுவதில் வல்லவராகவும்,இசைப் பாடல்கள் கேட்பதில் அலாதி விருப்பம் கொண்டவராகவும் விளங்கியது மட்டுமல்லாது கடின உழைப்பாளியாக வாழ்ந்ததுடன், அன்பும் பாசமும் நிறைந்த மனம் கொண்டவர்                                             

இவ்வாறு பிள்ளைகள்,பேரப்பிள்ளைகள், உற்றார் உறவினர், என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 08.11.2019 இல் 90 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிராத்திப்போம்.

எம் தந்தையே உம் வாழ்வை உருக்கி
நம் வாழ்வில் ஒளி ஏற்றிய
கருணை உறவே கலங்கா விழியே
விரும்பி வாழ்ந்த விடிவெள்ளியே
கலங்கி அழுகிறோம் தந்தையே
பாசம் இழந்து தவிக்கிறோம்