1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 11 MAR 1940
இறப்பு 05 APR 2019
அமரர் சரவணமுத்து சதாசிவம்
இறந்த வயது 79
சரவணமுத்து சதாசிவம் 1940 - 2019 புங்குடுதீவு குறிகட்டுவான் இலங்கை
Tribute 2 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 24.03.2020

யாழ்.புங்குடுத்தீவு குறிகட்டுவானைப் பிறப்பிடமாகவும், செட்டிக்குளத்தை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த சரவணமுத்து சதாசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

நெஞ்சகலா நினைவலைகளுடன் ஓராண்டு நினைவு அஞ்சலி.

பாசத்தின் சிகரமே பண்பின் உறைவிடமே
அன்பின் வடிவான எம் இனிய தந்தையே   
காக்கின்ற தெய்வம் கை தவற விட்ட வேளையிலே
காலன் உம் உயிர் பறித்து மாதங்கள்
உருண்டோடி வருடமானது அப்பா
உங்கள் நினைவுகள் மட்டும் நெஞ்சாங்
கூட்டில் கிடந்து அல்லாடுகிறது......

நீங்கள் நடந்த கால்த்தடங்களைத்
தேடுகின்றோம் 
வெற்றுத்தடங்களை கூடக்
காணோம்
காற்றினில் உம் குரல்
கேட்காதோ என கேட்கின்றேன்
பேரிரைச்சல்  தான் எம்
செவிகளில் விழுகிறது

நீங்கள் காற்றோடு கலந்து
ஆகுதி ஆகி விட்டீர்கள் என புரிந்தாலும்
மனம்  ஏற்க மறுக்கிறதே 
நினைவினில் எம்முடனும்
நிஜத்தினில் இறைவனிடமும் கலந்திட்ட
உங்கள் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகின்றோம்....

உங்கள் பிரிவுத் துயரால் துயருறும் 
மனைவி, பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள், பூட்டப்பிள்ளை..

தகவல்: குடும்பத்தினர்

Photos

No Photos

View Similar profiles

  • Muththumma Parvathipillai Kurikadduvan, Kokkuvil View Profile
  • Kirushnapillai Gunasekarampillai Uduppiddy, Settiikulam View Profile
  • Apputhurai Krishnamoorthy Sanganai, Luzern - Switzerland View Profile
  • Kanagasabai Thevendrakumar Analaitivu 6th Ward, Toronto - Canada, Balangoda View Profile