Born 21 MAY 1933
Died 06 SEP 2019
Mrs Ananthapavanam Kandiah
Age 86
Ananthapavanam Kandiah 1933 - 2019 Batticaloa Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இலங்கையின் கிழக்கு மாகாணத்தில் அழகிய இடமும், தேசிய உணர்வு கொண்ட மக்களும், எல்லா வளங்களும் சிறப்புற விளங்கும், மீன்பாடும் தேன்நாடு என அழைக்கப்படும் மட்டக்களப்பில் 21/MAY/1933 இல் திரு.திருமதி நடராஜா சத்தியபாமா தம்பதிகளின் அன்பு மகளான ஆனந்தபவனம் அவர்கள்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் ரஞ்சி, மகேஸ், மங்கா போன்ற உடன்பிறப்புடன் குறும்புகள் செய்து  வளர்ந்து பெரியவளானதும் திரு.திருமதி சந்தனம் வீரப்பா அழகு தம்பதிகளின் அழகிய ஆண் அழகான கந்தையா அவர்களைத் திருமணம் முடித்து சந்தோஷமாக வாழ்ந்ததன் பயனாக கௌரி எனும் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சர்வேஷ்வரா(ஈசா) என்பவரை திருமணம் முடித்து வைத்து, அழகும் அறிவும் நிறைந்த வைஷ்ணவி எனும் பூட்டப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                           

மேலும்  எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும், அன்பு பாசம் நிறைந்து காணப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும்  சாந்தமும்  கருணையும் கொண்டு வாழ்ந்தார்.                                          

இவ்வாறு பிள்ளை, பேரப்பிள்ளை,  உற்றார், உறவினர்கள் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 06.09.2019 இல் 86 வயதில் கனடாவில் உள்ள Scarborough நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.   

“மட்டு வாவியின் முத்தே
பட்டுப் போல் பளபளத்த
பவள மேனிப் பாவையே
கவளம் உருட்டி கையினில் தந்திடும்
அழகு அம்மா அன்பு பாட்டியே
எங்கே போனீர் எமைப் பிரிந்து”