Born 23 MAR 1985
Died 20 OCT 2019
Mrs Vijayaruban Subajini
Age 34
Vijayaruban Subajini 1985 - 2019 Akkarayan Sri Lanka

வாழ்க்கை வரலாறு

தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரான விஜயரூபன் சுபாஜினி அவர்களின் வாழ்க்கை வரலாறிது...

தமிழர்கள் அதிகமாக வசிக்கும் கிளிநொச்சி அக்கராயனையில் 23/MAR/1985 இல் ஜெகதீஸ்வரன் மகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மகளாக சுபாஜினி அவர்கள் பிறந்தார். விஜயேந்திரன், முரளிதரன், மனோரஞ்சன், நிதர்சனா, சகிலா எனும் சகோதரங்களோடு குறும்புகள் செய்து ஓடி ஆடி விளையாடி இனிமையாக வளர்ந்த இவர் பள்ளி மற்றும் கல்லூரி படிப்பை முடித்தவர்.

அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து திருமண வயதை எட்டியதும் பெற்றொர் நிச்சயித்தபடி பேரின்பநாயகம் கமலாதேவி தம்பதிகளின் அன்பு மகனான விஜயரூபன் என்பவரை 2000 வருட காலகட்டத்தில் திருமணம் முடித்ததுடன் பிரித்தானியவிற்கு குடிபெயர்ந்த இவர், இல்லற வாழ்வை சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக, யதுமிலன், மிதுனன் எனும் பிள்ளைகளைப் பெற்று சந்தோசமாக வாழ்ந்து வந்தார்.

எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவரான இவர், தனது அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவர்.

அனைவரோடும் அன்பாக பேசி சகஜமாக பழகுபவரான இவர், தனது பாசத்திற்குரிய பெற்றோர், கணவர், பிள்ளைகள், சகோதரங்கள், உற்றார், உறவினர்கள் என அனைவரையும் விட்டு 20.10.2019 இல் 34 வயதில் லண்டனில் மாரடைப்பால் காலமானார்.

அன்னாரின் ஆத்மா எல்லாம் வல்ல இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற பிரார்த்திக்கின்றோம்.