- No recent search...

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு 4ம் வட்டாரம், கனடா ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த வேலாயுதம் விசாலாட்சி அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டுகள் இரண்டானதம்மா
ஆறாத உன் ஞாபகங்கள்
மீண்டும் மனதில் உருண்டோட
மீள முடியாது தவிக்கின்றோம்
மெளனமாய் அழுகின்றோம்
உன் அன்பான பேச்சும்
இரக்கம் கொண்ட உள்ளமும்
கனிவான எண்ணமும்
உன் போல துணையும்
யாருமில்லை இன்றுவரை
கணப்பொழுதில் கண்மூட
உன் இறுதி மூச்சு நின்றோட
நம்ப முடியவில்லை இன்னளவும்
நீ இல்லாத வாழ்க்கையை
காலங்கள் போகலாம்
காயங்கள் மாறலாம்
நெஞ்சில் உன் நினைவுகள்
என்றும் நம்மை விட்டு நீங்காது அம்மா…
உங்கள் நினைவுகளைக்
காலமெல்லாம் சுமந்து நிற்போம் பாசமிகு
பிள்ளைகள், மருமக்கள், பேரப்பிள்ளைகள்
பூட்டப்பிள்ளைகள்...
அம்மாவின் ஆத்மா சாந்திஅடைய ஆண்டவரிடம் பிரார்த்திக்கிறோம் குடும்பத்தார்க்கு ஆழ்ந்த அனுதாபங்கள்