மரண அறிவித்தல்
பிறப்பு 20 NOV 1983
இறப்பு 24 MAY 2020
திருமதி லோஜினா றமணன்
வயது 36
லோஜினா றமணன் 1983 - 2020 வவுனியா இலங்கை
Tribute 49 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

வவுனியாவைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Sumiswald ஐ வதிவிடமாகவும் கொண்ட லோஜினா வசந்தராஜ் அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், வவுனியாவைச் சேர்ந்த ஞானானந்தம் வடிவாம்பிகை தம்பதிகளின் அருமைப் புதல்வியும், புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைச் சேர்ந்த காலஞ்சென்ற சண்முகலிங்கம், நாகேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகளும்,

வசந்தராஜ்(றமணன்) அவர்களின் ஆருயிர் மனைவியும்,

அகன், ஆர்யன் ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கலாநீதன், மயூரன், லக்‌ஷன் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

சசிரேகா, லிங்க்கேஸ்வரன்(குமணன்), சுரேகா, டிலஸ்சனா ஆகியோரின் ஆசை மைத்துனியும்,

 யோகேஸ்வரன்(ரூபன்), பிரதீபன், லோசனா ஆகியோரின் அன்புச் சகலியும்,

ஆதிசன், அரசு, தாமிரா, யாதவ் ஆகியோரின் அன்பு அத்தையும்,

அசான், ஜனீஷ், அஜீஷ் ஆகியோரின் பாசமிகு சித்தியும் ஆவார்.

நாட்டின் அசாதாரண சூழ்நிலை காரணமாக அன்னாரின் இறுதிக்கிரியை புதன்கிழமை அன்று அவரது குடும்பத்தினருடன் மட்டுமே நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction

தொடர்புகளுக்கு

றமணன் - கணவர்
ஞானம் - தந்தை
நாகேஸ்வரி - மாமி
குமணன் - மைத்துனர்

Summary

Photos

No Photos

View Similar profiles