மரண அறிவித்தல்
பிறப்பு 30 JUN 1931
இறப்பு 20 JAN 2021
திரு அன்னலிங்கம் ஸ்ரீஸ்கந்தராஜா
பழைய மாணவர்- யூனியன் கல்லூரி, முன்னாள் இலங்கை ஒலிபரப்பு கூட்டுத்தாபன தமிழ்சேவை ஒலிபரப்பு ஒழுங்கு கட்டுப்பாட்டாளர்
வயது 89
அன்னலிங்கம் ஸ்ரீஸ்கந்தராஜா 1931 - 2021 காங்கேசன்துறை இலங்கை
Tribute 30 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். காங்கேசன்துறை வெளிச்சவீட்டடியைப் பிறப்பிடமாகவும்,  கொழும்பு, கனடா Cornwall ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட அன்னலிங்கம் ஸ்ரீஸ்கந்தராஜா அவர்கள் 20-01-2021 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்ற திரு. திருமதி அன்னலிங்கம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற திரு. திருமதி கந்தையா தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற இராஜமணி(இராசு) அவர்களின் அன்புக் கணவரும்,

ராஜஸ்ரீ(Accountant- Toronto), சியாமளா(லண்டன்), ஊர்மிளா(கனடா Cornwall), நிர்மலா(இலங்கை), மஞ்சுளா(அமெரிக்கா) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

வாசுகி, காலஞ்சென்ற ஜீவகன், கணேஷலிங்கம், தவேந்திரன், ஆனந்தலிங்கம் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற பத்மா(தங்கா) அவர்களின் அருமைச் சகோதரரும்,

பிரஷாந், விதூசன், நேத்தன், சக்தி, தர்ஷினி, தீசன், செல்வன், யாதவன், சங்கீர்தன், காலஞ்சென்ற ரகுராம், மோனிஷா, மனோஜ் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.   

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

Photos

View Similar profiles