Born 07 JUN 1930
Died 22 JUL 2019
Mr Nagayah Kovinthan (கார்)
Age 89
Nagayah Kovinthan 1930 - 2019 Kuppilan Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சங்கங்கள் கூட்டிவளர்த்து சபையேறி ஆட்சி கண்ட செம்மொழியாம் ஒருங்கே தழைத்தோங்கி வளரும் ஈழவள நாட்டில் சென்னியெனத் திகழும் வடதிசையில் யாழ்ப்பாண மாவட்டம் குப்பிளானில் 07/Jun/1930 இல் திரு.திருமதி கோவிந்தர் லட்சுமி தம்பதிகளின் அன்பு மகனாக திரு.நாகையா அவர்கள்  இவ் அழகு நிறைந்த நாட்டில் மழலையாக அவதரித்தார்.                                         

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் துரைசிங்கம், இராசம்மா, கனகம்மா, சுப்பிரமணியம் மற்றும் பூமணி எனும் உடன்பிறப்புகளுடன் குறும்புகள் செய்து மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவனானதும், முருகேசு தெய்வானை தம்பதிகளின் அன்பு மகள் கங்கா லஷ்மி எனும் அழகிய தேவதையுடன் திருமண பந்தத்தில் இணைந்து  மகிழ்ச்சியாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து உலகநாதன்,ஸ் ரீதரநாதன், கோகிலா, வரதீஸ்வரன், கேதீஸ்வரன், சசிகலா, நகுலேஸ்வரன் எனும் அழகிய பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சிவகலா, இசைவாணி,ஸ் ரீஸ்கந்தராஜா, விஜி, அம்பிகைபாகன், றஞ்சா என்பவருக்கு திருமணம் முடித்து வைத்து நிமலன்-மதுரிகா, யாமினி-சஜீவ், டனா, டனீ, டானு, ராகுலன், றிஷான், ஓவியா, அருண், அகிலன், அருளினி, கவின், சுதன், பவன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து  வந்தார்.                                              

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும்,தனக்கே உரித்தானபுன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் பொறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார், இவ்வாறு  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர்கள், நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் 22.07.2019 இல் 89 வயதில் கனடாவில் இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

தங்கச் சிரிப்பே  தலைமைக் குணமே
எங்கும் நிற்கும்  இனிமை உறவே
அங்கம் வலிக்க  உழைத்த உயிரே
அன்பு நிறைந்த  அழகு உள்ளமே
என்தன் உயிராய்  வாழ்ந்து
எங்கே பிரிந்து போனீர்