மரண அறிவித்தல்
தோற்றம் 03 JUN 1930
மறைவு 24 MAY 2020
திரு இராஜா இராஜேந்திரராஜா
பத்திரிகையாளர்
வயது 89
இராஜா இராஜேந்திரராஜா 1930 - 2020 மானிப்பாய் இலங்கை
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். மானிப்பாய் தெற்கைப் பிறப்பிடமாகவும், நல்லூரை வதிவிடமாகவும் கொண்ட இராஜா இராஜேந்திரராஜா அவர்கள் 24-05-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மானிப்பாய் தெற்கைச் சேர்ந்த டபிள்யு. எம். இராஜா தையல்நாயகி தம்பதிகளின் அன்புப் புதல்வரும், நல்லூரைச் சேர்ந்த காலஞ்சென்ற கந்தையா, பாக்கியம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற தனலட்சுமி அவர்களின் அன்புக் கணவரும்,

ஆர். ஆர். இராஜ்குமார்(அதிபர் - J.R.B.Group, கனடா), இராஜலட்சுமி(கனடா), இராஜநாதன்(பிரித்தானியா), இராஜமனோகரி(ரஜனி, கனடா) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

சுமதி, கிருபானந்தம், சாந்தினி, சஞ்சித் ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காலஞ்சென்ற சேனாதிராஜா, தேவராஜா(பிரித்தானியா), காலஞ்சென்றவர்களான ரட்ணராஜா, ராஜேஸ்வரி சிவப்பிரகாசம், மகேந்திரராஜா, செல்வராஜா ஆகியோரின் அன்புச் சகோதரரும்,

காலஞ்சென்ற பூலோகலட்சுமி மற்றும் P.K. மகேந்திரன்(கனடா) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

சாய்பிருந்தன், யெனார்த்தனன், கிரிஜா கீதன், ரஜீவன், சிரான், யானுனி, சபிலன், மிதுலன், திவ்யா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 27-05-2020 புதன்கிழமை அன்று மு.ப 08:30 மணிமுதல் மு.ப 11:30 மணிவரை யாழ்ப்பாணம் நல்லூர் - 338 பருத்தித்துறை வீதியிலுள்ள சங்கிலியன் தோப்பு எனும் முகவரியில் உள்ள அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் கோம்பயன் மணல் மயானத்தில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

ஆர்.ஆர். இராஜ்குமார் - மகன்
இராஜலட்சுமி - மகள்
இராஜநாதன் - மகன்
இராஜமனோகரி - மகள்
கஜன்
தேவரஞ்சன்(Scout)
நந்தன்

Summary

Life Story

திரு. இராஜா இராஜேந்திரராஜா (மானிப்பாய், நல்லூர்) அவர்கள் யாழ்ப்பாணம் சிறீலங்கா அச்சகத்தின் முகாமையாளராகப் பணியாற்றியவர். கொழும்பு லேக் ஹவுஸ் பத்திரிகைகளின்... Read More

Photos

No Photos

View Similar profiles