மரண அறிவித்தல்
தோற்றம் 15 OCT 1932
மறைவு 18 SEP 2019
திருமதி சுந்தரலஷ்மி சின்னையா
வயது 86
சுந்தரலஷ்மி சின்னையா 1932 - 2019 கொழும்பு இலங்கை
Tribute 4 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

கொழும்பைப் பிறப்பிடமாகவும், யாழ். உடுவிலை வதிவிடமாகவும், பிரித்தானியா Blackpool ஐ வசிப்பிடமாகவும் கொண்ட சுந்தரலஷ்மி சின்னையா அவர்கள் 18-09-2019 புதன்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தம்பு சின்னத்தங்கம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வியும், மாவிட்டபுரத்தைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான நாகமுத்து சிதம்பரம் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற நாகமுத்து சின்னையா(Retired PWD Engineer) அவர்களின் அன்பு மனைவியும்,

சுசீலா, ஸ்ரீரங்கன், மஞ்சுளா ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

தேவாம்பிகை, சண்முகநாதன், காலஞ்சென்ற குமாரசுவாமி, கதிரவேலு ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

Dr. சாந்தகுமார், ஞானாம்பாள், Dr.கிருபரன் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற பாலசுப்பிரமணியம், தனலட்சுமி, தவமணி, மகேஸ்வரி ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

Dr. ஆரணி, ஆர்த்தி, ஜனகன், சங்கவி, Dr. நந்தீஷ், எட்வேர்ட், சாமுவேல் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

ரூபன் அவர்களின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஸ்ரீரங்கன் - மகன்
சாந்தகுமார் - மருமகன்
கிருபரன் - மருமகன்

Summary

Photos

No Photos

View Similar profiles