Born 21 NOV 1954
Died 12 AUG 2019
Mrs Emmanuvel Jeyarani (வவா ஜெயா)
Age 64
Emmanuvel Jeyarani 1954 - 2019 Chundukuli Sri Lanka

வாழ்க்கை வரலாறு

இயற்கை   அழகு நிறைந்த  இலங்கைத் தீவில் தமிழர்கள் தொண்மையாக வாழும் பகுதியும்,சைவ, கிறித்தவ பாரம்பரியம் தழைத்தோங்கும் யாழ்ப்பாணத்தின் அருகில் மக்கள் செறிந்து வாழும் பகுதியான சுண்டுக்குழியில் 21/NOV/1954 இல் திரு.திருமதி அல்பிறேட் பிரான்சிஸ் ராசு குணரத்தினம் ராசு தம்பதிகளின் அருமை மகளாய் ஜெயராணி அவர்கள்  இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                            

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் மெல்ல மெல்ல வளர்ந்து பெரியவளானதும்   திரு.திருமதி திருச்செல்வம் லூத்தம்மா தம்பதிகளின் அன்பு மகன் இம்மானுவேல்(ரட்ணம்) என்பவரைத் திருமணம் முடித்து சந்தோஷமாக  வாழ்ந்ததன் பயனாக லூட்சியா எனும் அன்புப் பிள்ளையைப் பெற்று பாதுகாத்து வளர்த்து மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                              

மேலும் வவா என்றும் ஜெயா எனவும் அழைக்கப்படும் இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும், பழைய கதைகள் சொல்வதில் வல்லவராகவும்,அன்பு பாசம் நிறைந்து கானப்படும் அழகிய உறவாக விளங்கியதுடன். அமைதியும்  சாந்தமும்  கருணையும் கொண்டு வாழ்ந்தார். இவ்வாறு கணவன், பிள்ளை, உற்றார், உறவினர்கள், என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 12.08.2019 இல் 64 வயதில் ஜேர்மனியில் உள்ள Dusseldorf நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை வேண்டுகிறோம்.       

சுண்டுக்குழி மண்ணின்  சுந்தர வதனமே
பண்பட்ட மனதுடன்   பாசம் பொழிந்து
வெண் மலர் போல்   வாசம் வீசி
கண் பட்டு வீழ்ந்தீரே   கரு உறவே
என்னென்று சொல்வேம்    எம் நிலையை