Born 30 NOV 1931
Died 06 JUN 2019
Mr Muthiah Nagalingam (குழந்தை)
இந்திரா கூல்பார் உரிமையாளர்- மருதனாமடம்
Age 87
Muthiah Nagalingam 1931 - 2019 Pungudutivu 12th Ward Sri Lanka

வாழ்க்கை வரலாறு

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும்,கடலுணவுகள்,கால்நடை வளர்ப்பு,பயன்தரு மரங்கள், மரக்கறித் தோட்டங்கள்,மிளகாய் வெங்காய வயல்கள் என அழகு நிறைந்த புங்குடுதீவு 12ஆம் வட்டாரத்தில் 30/NOV/1931 ஆம் ஆண்டில் திரு.திருமதி நாகலிங்கம் தெய்வானைப்பிள்ளை தம்பதிகளுக்கு அன்பு மகனாக திரு.முத்தையா அவர்கள் இராஜரத்தினம், நல்லதங்கம், நாகரத்தினம், சின்னத்துரை, Dr.கந்தையா எனும் அன்பு உடன் பிறப்புகளுடன் இவ் அவனியில் வந்துதிர்த்தார்.                                        

அத்துடன் அன்பும் அழகும் நிறைந்த இவர் குறும்புகள் செய்து வளர்ந்து மிடுக்கான தோற்றத்துடன் பண்பு நிறைந்த நல்லுள்ளம் கொண்டவராக விளங்கியதுடன் திரு.திருமதி நாகேந்திரம்(சின்னத்துரை) இராசம்மா தம்பதிகளின் அன்பு மகள் மகாலெட்சுமி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாக வாழ்ந்து சிவகௌரி, ஜெயகௌரி, திருக்கேதீஸ்வரன், இந்திரகௌரி போன்ற பிள்ளைகளைப் பெற்று பாதுகாத்து வளர்த்து, பெரியவர்களானதும் சிவராமலிங்கம், ஜெயரஞ்சினி, சிவரூபன் போன்றவர்களுக்கு திருமணம் முடித்து வைத்து தனது  கடமையை சிறப்பாகச் செய்து அஷ்வினி-நிஷாந்தன், ரம்மியா, யாகவி, ஸ்ரீராம், தக்‌ஷன், கேசன் போன்ற  பேரப்பிள்ளைகளுடனும், அபிதா எனும் பூட்டப்பிள்ளையுடன் அன்பாக பேசி மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                               

மேலும் இலங்கையின் உள்நாட்டு போர் காரணமாக வடபகுதியுள்ள தீவுப் பிரதேசங்களில் நல்ல பாதுகாப்பு இல்லாத நிலையில் இடம் இடம்பெயர்ந்து மருதனாமடத்தில் தற்காலிகமாக குடும்பமாக வாழ்ந்தார். அப்போது இந்திரா கூல்பாரை நிறுவி கஷ்டப்பட்டு உழைத்ததுடன்,மேலும் போர் இறுக்கமடைய கனடா சென்று வாழ்ந்து வந்ததுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும் நிறைந்தவராக விளங்கியதுடன்,  இனிமையான வார்த்தைகள் பேசுவதுடன் இரக்ககுணம் நிறைந்தவராகவும் அனைவருக்கும் உதவிகள் புரியும் குணம் கொண்டு விளங்கினார். இவ்வாறு பிள்ளைகள், பேரப்பிள்ளைகள்,பூட்டப்பிள்ளை   என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர்  06.06.2019 இல் 87 வயதில் கனடாவில் உள்ள Markham நகரில்  இறையடி எய்தினார், அன்னாரின்  ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

புங்குடுதீவில் உதிர்த்த       
......புதுத் தெய்வமே
பங்ககுணம் அற்ற             
......பாச மலரே
எங்கும் தோன்றும்              
........எளிமை மனமே
இங்கே பிரிந்து           
......எங்கே போனீர்