1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 02 JUL 1950
இறப்பு 28 OCT 2019
அமரர் வேலன் சுப்பிரமணியம்
பச்சிலைப்பள்ளி பிரதேச கூட்டுறவு முகாமையாளர், புதுக்குடியிருப்பு இணைய கூட்டுறவு முகாமையாளர், வடமாகாண பேரிணைய முகாமையாளர்
இறந்த வயது 69
வேலன் சுப்பிரமணியம் 1950 - 2019 குடத்தனை இலங்கை
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி: 15.11.2020

யாழ். குடத்தனையைப் பிறப்பிடமாகவும், முகமாலையை வசிப்பிடமாகவும்,  பரந்தனை தற்போதைய வதிவிடமாகவும் கொண்டிருந்த வேலன் சுப்பிரமணியம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டொன்று ஆனால் என்ன
ஆயிரம் தான் கடந்து போனால் என்ன
அன்பான அப்பாவே உங்கள் பிரிவால் - நாம்
வாடுவதை யார் எடுத்துரைப்பார்கள்..

உறுதுணையாய் நானிருக்க
உற்ற துணையாய் நீங்கள் இருக்க
யார் கண் பட்டதுவோ- என்னை
பரிதவிக்க விட்டு எங்கு சென்றீர்கள் அப்பா!!!

ஒளிதரும் சூரியனாய்
இருள் அகற்றும் சந்திரனாய்
ஊர்போற்றும் நல்லவனாய்
பார் போற்றும் வல்லவனாய்
வாழ்வாங்கு வாழ்ந்து- எமையெல்லாம்
வாழவைத்த குல விளக்கே!!!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.. 

தகவல்: குடும்பத்தினர்

Summary

Life Story

பச்சைப் பசேல் என பார்க்கும் இடம் எங்கும் கண்களுக்கு குளிர்ச்சி தரும் இலங்கையின் மருதநிலம் கொண்ட வடமராட்சிப் பகுதியில் அமையப் பெற்ற குடத்தனை எனும் ஊரில் சீரும்... Read More

Photos

View Similar profiles