Born 10 FEB 1947
Died 06 SEP 2019
Mr Sitrambalam Arumugam
Age 72
Sitrambalam Arumugam 1947 - 2019 Kopay Sri Lanka

வாழ்க்கை வரலாறு

சகலவளமும் நிறையப்பெற்ற இலங்கையின் வடபால் அமைந்துள்ள யாழ்ப்பாணம் கோப்பாயில் புகழ் பூத்த சீமான் திரு.சிற்றம்பலம் அவர்தம் பாரியார் செல்லமுத்து அவர்களின் அன்பு மகனாக 10/FEB/1947 ஆம் ஆண்டில் திரு.ஆறுமுகம் அவர்கள் சந்திராதேவி, சின்னத்தம்பி, இளையதம்பி, சிவநாயகி, வள்ளியம்மை போன்ற உடன்பிறப்புகளுடன் இவ் அழகிய பூமியில்  அவதரித்தார்.                                            

அத்துடன் இளமையிலே தன்முயற்சியும் கடின உழைப்பும் தன்னம்பிக்கையும் மிகுந்த இவர் தந்தையுடன் சேர்ந்து தொழில் செய்து உயர்நிலை அடைந்த இவர்  திரு.திருமதி சின்னத்தம்பி சிவக்கொழுந்து தம்பதிகளின் அன்பு மகளான தவமலர் அவர்களை பெற்றோரும் உற்றாரும் விரும்பியபடி கரம்பற்றி சந்தோசமாக வாழ்ந்ததன் பயனாக சுபாசினி, கணேஷ், கவிதா, சிவரமணன், சுரேந்தினி, சுபாஸ்கரன் போன்ற அன்புப் பிள்ளைகளை பெற்று வளர்த்து பத்மநாதன், சாரு, ஆரணன், சிவகௌரி, ஜெயராசலிங்கம் போன்றோரைத் திருமணம் முடித்து வைத்து சங்கர், சங்கவி, சகி, வேணு, யனுசன், சஷ்வின், ஆதிஷ், ஆருஷன், மிதுஷா, வருண், அக்சயன் போன்ற பேரப்பிள்ளைகளுடன் மகிழ்ச்சியாக வாழ்ந்து வந்தார்.                                                 

மேலும் அன்பான பேச்சால் எல்லோர் மனதிலும் இடம் பிடித்தவரும்  கடின உழைப்பாளியும். கலகலப்பாக பேசுவதும், தனக்கே உரித்தான புன்சிரிப்பும் கொண்டதுடன், வாழ்வில் நற்பண்பும் ஒழுக்கமும்  பெறுமைசாலியும் நிறைந்தவராக  விளங்கினார்.                                                                                  

இவ்வாறு மனைவி,  பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் நண்பர்கள் என  மகிழ்வுடன் வாழ்ந்த இவர் உறவுகளைத் தவிக்கவிட்டு 06.09.2019 இல் 72 வயதில் கோப்பாயில்  இறைபதம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனை பிராத்திப்போம்.

கோப்பாய் தந்த குல விளக்கே
காப்பார் அற்றுத் தவித்த எம்மை
பாப்பார் அக்கறை உள்ளமுடன்
சேர்த்தார் நல்நிலை அடைய
வீழ்ந்தார் எமை விட்டு
காப்பார் இன்றி கதறி அழுகிறோம்.