மரண அறிவித்தல்
பிறப்பு 03 SEP 1947
இறப்பு 14 FEB 2020
திரு தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் (வரதன்)
முன்னாள் ஆசிரியர், ஆசிரிய ஆலோசகர்- டிறிபேர்க் கல்லூரி, ஓய்வுபெற்ற உதவிக் கல்விப் பணிப்பாளர்- முறைசாராக் கல்விப் பிரிவு, தென்மராட்சி
வயது 72
தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் 1947 - 2020 Kachcheri இலங்கை
Tribute 8 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கச்சேரியைப் பிறப்பிடமாகவும், சாவகச்சேரி கச்சாய் வீதியை வசிப்பிடமாகவும் கொண்ட தாமோதரம்பிள்ளை பாலசுந்தரம் அவர்கள் 14-02-2020 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான தாமோதரம்பிள்ளை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற தம்பு, சின்னப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

புஸ்பமலர் அவர்களின் அன்புக் கணவரும்,

கந்தசாமி பரமேஸ்வரி தம்பதிகளின் பாசமிகு பெறாமகனும்,

காலஞ்சென்ற லோகநாதன்(ரமணா) அவர்களின் அன்புச் சகோதரரும்,

காயத்திரி, கல்பனா(லண்டன்), துஸ்யந்தி(கனடா), சாருலதா(கொழும்பு), சரச்சந்தர்(கனடா), உதயசந்தர்(சாவகச்சேரி நகர சபை உறுப்பினர்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

பொபி(நோர்வே), சூரியபாலன்(லண்டன்), உதயதாஸ்(கனடா), கதாயுதன்(கொழும்பு), கிரிஜா(கனடா), திஷானி ஆகியோரின் அன்பு மாமனாரும்,

சுசீந்திரன்(ஓய்வுபெற்ற மக்கள் வங்கி பிராந்திய முகாமையாளர்), சுகந்தி, சுமந்திரன்(லண்டன்) ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

ரத்தினம், சந்திரசேகரம் ஆகியோரின் அன்பு மருமகனும்,

சுபத்திரா, ஷியாமா, காலஞ்சென்ற கவாஸ்கர் ஆகியோரின் அன்புச் சித்தப்பாவும்,

ரவி, உதயன், சங்கர், குட்டி, காந்தன், அனுசியா, காலஞ்சென்ற ரங்கன், சித்திரா, இந்திரன் ஆகியோரின் அன்பு மச்சானும்,

சற்குணம்(கனடா), நவமலர், லோகேஸ்வரி, காலஞ்சென்ற திருநாவுக்கரசு, சிவகுரு ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

மிதூர்சன்(இலங்கை வங்கி- திருகோணமலை), கவாஸ்கர், பானுகா, சௌமியா, ரம்மியன், அஸ்விந், காருஜன், கார்த்திகா, சஸ்மிதா, சஜித், ப்ரதிக்‌ஷா, ப்ரக்‌ஷித் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 16-02-2020 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் சாவகச்சேரி கண்ணாடிப்பிட்டி இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

குடும்பத்தினர்

கண்ணீர் அஞ்சலிகள்

Summary

Photos

No Photos

View Similar profiles