Born 05 JAN 1940
Died 07 JUL 2019
Mrs Thirumakal Krishnamoorthy
பழைய மாணவி- யாழ் இந்து மகளிர் கல்லூரி காரைநகர் இந்துக் கல்லூரி
Age 79
Thirumakal Krishnamoorthy 1940 - 2019 Malaysia Malaysia

வாழ்க்கை வரலாறு

தென் கிழக்காசியாவில் முக்கியமான நாடும் மலாக்கா நீரிணைக்கு அருகில் உள்ளதும் கப்பல் போக்குவரத்தின் முக்கிய வலயமாக விளங்கும் பகுதியில் சிறப்பும் சகல வளங்களைக் கொண்டதுமான மலேசியாவில் 05/Jan/1940 ஆம் ஆண்டு  அருளையா சரஸ்வதி தம்பதிகளின் அன்பு மகளாக திருமகள் அவர்கள் இராசலட்சுமி, ஜெயமணி, சிவனேஸ்வரன், அருட்சோதி, ரோகினி, ரேவதி போன்றவர்களின் சகோதரியாக    இவ் அவனியில் வந்துதிர்த்தார்.

அன்பும் பண்பும் நிறைந்த இவர்  குறும்புகள் செய்து வளர்ந்து  பெரியவரானதும் இரத்தினசிங்கம் நேசம்மா தம்பதிகளின் அன்பு மகன் சிரேஷ்ட சுகாதார பரிசோதகர் கிருஷ்ணமூர்த்தி என்பவரைத் திருமணம் முடித்து இன்பமாகவும் சந்தோசமாகவும் வாழ்ந்து உதயகுமார், ஜெயந்தகுமார், சுரேந்திரகுமார் போன்ற அன்புப் பிள்ளைகளைப் பெற்று வளர்த்து சந்திரமலர், காயத்திரி, கருணாவதி போன்றவர்களை பிள்ளைகளின் விருப்பத்திற்கு ஏற்ப திருமணம் முடித்து வைத்து பிருந்தா, சாரங்கா, அபிஷா, பிரதீஸ் போன்ற பேரப்பிள்ளைகளுடனும், அஸ்வின் என்ற பூட்டப்பிள்ளையுடனும் மகிழ்வுற்று வாழ்ந்து வந்தார்.                                         

மேலும் நல்லூர்,காரைநகர் போன்றவற்றில் வாழ்ந்ததுடன்  யாழ்.இந்து மகளிர் கல்லூரி,காரைநகர் இந்துக் கல்லூரி போன்றவற்றின்  பழைய மாணவியான  இவர் எப்போதும் சிரித்த முகத்துடன் இருப்பவராகவும்,சுயநலம் இல்லாது அன்பு காட்டுபவராக விளங்கினார்.அத்துடன் அமைதியும் சாந்தமும்  கருணையும் கொண்டு விளங்கியதுடன் குடும்பத்தின் வளர்ச்சிக்காக பாடுபட்டு உழைத்தார்.இவ்வாறு கணவன், பிள்ளைகள், பேரப்பிள்ளைகள், உற்றார், உறவினர் என இன்பமாக வாழ்ந்து வந்த  இவர் 07.07.2019 இல் 79 வயதில் கனடாவில் உள்ள Toronto நகரில் இயற்கை மரணம் அடைந்தார். அன்னாரின் ஆத்மா சாந்தியடைய இறைவனைப் பிரார்த்திப்போம்.

மலேசியா தந்த மகத்துவ உள்ளமே
மனித குலத்தின் உயரிய பொக்கிஷமே
பணி செய்து மகிழ்ந்த உறவே
பாசம் கொண்ட நேச மனமே
கானம் பாடி தூங்க வைப்பீர்
இனி உமை எப்போ காண்போம்