1ம் ஆண்டு நினைவஞ்சலி
அன்னை மடியில் 11 MAR 1951
இறைவன் அடியில் 13 JUN 2019
அமரர் துரைச்சாமி சாம்பசிவம்
இறந்த வயது 68
துரைச்சாமி சாம்பசிவம் 1951 - 2019 நயினாதீவு இலங்கை
Tribute 16 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். நயினாதீவு 4ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும்,  ஜேர்மனி Minden, Rheinfelden ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த துரைச்சாமி சாம்பசிவம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

இறைவனின் படைப்பில் பிறப்பும் இறப்பும்
இயல்பான விதியென்பதை நாம் உணர்ந்திட்ட போதும்,
ஆனைவரிடத்திலும் இன்முகம் காட்டி
அன்பும் அரவணைப்பும் கூட்டி
பிள்ளைகளை கல்வியில் மேம்பட வைத்து
வாழ்கைப் பெருங்கடலில் எமக்கு
வளமான வாழ்கை அமைத்துத் தந்த அப்பாவே....

ஆறாத் துயரில் எமை ஆழ்த்திவிட்டு
மீளாத் துயில் கொண்டு இன்று,
ஆண்டு ஒன்று ஆனபோதும்
அனுதினமும் நீங்கள் அசைந்து திரிந்த
இடமெங்கும் உங்கள் திருமுகம் தோன்றுதிங்கே

மாண்டோர் மீண்டும் வருவாரோ மானிடத்தில்
எனும் வாக்குப் பொய்குமானால் மகிழ்வோம் நாம்.
அன்பை நிறைத்து அரவணைத்து
முத்தம் சொரிந்த பேரப்பிள்ளைகள், தாத்தா தாத்தா என்று
தினமும் புலம்பும் புலம்பல்கள் கேட்கிறதா.

ஆண்டுகள் பலவானாலும் என்றென்றும்
எங்கள் இதயக்கூட்டில் உங்கள்
நினைவுகளைச் சுமந்திருக்கும்
மனைவி, பிள்ளைகள், மருமக்கள்,
பேரப்பிள்ளைகள்.   

தகவல்: குடும்பத்தினர்

Summary

Life Story

யாழ்ப்பாணத்தின் அழகிய தீவுகளில் ஒன்றும், இதிகாச காலத் தொன்மை கொண்ட நயினை நாகபூசனி அம்மன் அருள்பாலிக்கும் தீவும், கடலுணவுகள், கால்நடை வளர்ப்பு, பயன்தரு மரங்கள்,... Read More

Photos

No Photos

View Similar profiles