மரண அறிவித்தல்
பிறப்பு 05 JAN 1941
இறப்பு 04 DEC 2020
திரு மரியநாயகம் ஆசீர்வாதம்பிள்ளை
ஓய்வுபெற்ற வெளிக்காத்து அலுவலர்- மாவட்ட நீதிமன்றம், முல்லைத்தீவு
வயது 79
மரியநாயகம் ஆசீர்வாதம்பிள்ளை 1941 - 2020 செல்வபுரம் இலங்கை
Tribute 14 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு செல்வபுரத்தைப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட மரியநாயகம் ஆசீர்வாதம்பிள்ளை அவர்கள் 04-12-2020 வெள்ளிக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான மரியநாயகம் செல்லம்மா தம்பதிகளின் சிரேஸ்ட புத்திரரும், மயிலிட்டியைச் சேர்ந்த காலஞ்சென்ற செலஸ்ரின் இன்னேசிங்கம் தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற லில்லி அக்னஸ் அவர்களின் அன்புக் கணவரும்,

ஜெயக்குமார்(ஆசிரியர்- வ/அஸ்அமீர் முஸ்லீம் ம.வி), ஜெயறஞ்சினி(ஆசிரியை- மு/றோ.க.த பெண்கள் பாடசாலை), டொறின் சாந்தினி(மன்னார்), அருட்தந்தை அன்ரன் புனிதகுமார்(அவுஸ்திரேலியா), ஜோண்சன் தேவகுமார்(லண்டன்), கொண்சன் அருட்குமார்(லண்டன்) ஆகியோரின் அன்புத் தந்தையும்,

ஆன் ஸ்றஜினி(ஆசிரியை- வ/கூமாங்குளம் சித்தி வினாயகர் வித்தியாலயம்), வின்சன் யேசுராஜா(அலுவலகப் பணியாளர்- முல்லைத்தீவு ம.வி), யேசுதாசன் றோச்(வெளிக்காத்து அலுவலர் மாவட்ட நீதிமன்றம்- மன்னார்), ஆன் ஜான்சினியா(லண்டன்), வினோதினி(லண்டன்) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

டனீசியன், கிசோஜியா, மரியசஜோன், ஆன்டிபோறிக்கா, லுக்சன், பியுஸ்ரன், ஜஸ்லின் ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் நல்லடக்கத் திருப்பலி 07-12-2020 திங்கட்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் முல்லைத்தீவு செல்வபுரம் புனித யூதாததேயு ஆலயத்தில் நடைபெற்று பின்னர் சிலாவத்தை சேமக்காலையில் திருவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

No Photos

View Similar profiles