பிரசுரிப்பு Contact Publisher
மரண அறிவித்தல்
மலர்வு 18 JUN 1933
உதிர்வு 04 DEC 2018
டாக்டர் கந்தையா செல்லத்துரை ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி- மூதூர்
கந்தையா செல்லத்துரை 1933 - 2018 அனலைதீவு இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்லத்துரை அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கந்தையா தையலம்மை தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான பரமசிவம் தையலம்மை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

மனோன்மணி அவர்களின் ஆருயிர்க் கணவரும்,

செல்வச்சந்திரன், செல்வராணி, புஸ்பராணி(ஆசிரியை- தி/மெதடிஸ் மகளிர் கல்லூரி), மோகனச்சந்திரன், ரவிச்சந்திரன், உதயராணி(ஆசிரியை- தி/உவர்மலை விவேகானந்தா கல்லூரி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்ற கனகாம்பிகை அவர்களின் அன்புச் சகோதரரும்,

சிவானந்தன், சுவந்தினி, விமலகுமரன்(ப.நோ. கூ. சங்கம்- திருகோணமலை), சிவப்பிரியா, ஐங்கரன்(பிரதேச செயலகம். ப. சூ திருகோணமலை) ஆகியோரின் அன்பு மாமனாரும்,

காங்கேசன், கங்காதரம், காலஞ்சென்றவர்களான சுப்பிரமணியம், பார்வதி, மார்க்கண்டு, அருளம்பலம் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

ருக்‌ஷா, ஜனுஜா, கார்த்திக், செந்தூரி, காலஞ்சென்ற ஹரீஸ், குகேஷ், லதுசன், சாருகேஷ், சகானன், பிருத்விகா, ஆர்த்தி, மித்ரா, ரிஷகரன், மதுஷகா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை 09-12-2018 ஞாயிற்றுக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் திருகோணமலை இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுகொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

மனைவி
செல்வச்சந்திரன் - மகன்
சிவானந்தன் - மருமகன்
விமலகுமரன் - மருமகன்
மோகனச்சந்திரன் - மகன்
ரவிச்சந்திரன் - மகன்
ஐங்கரன் - மருமகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Jeyaveerasingam India 4 months ago
எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஐயாவின் ஆத்ம சாந்திக்கும்,குடும்பத்தினரின் ஆத்மபலத்திற்கும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
Subramaniam arulpiragasam Germany 4 months ago
கண்ணீர் அஞ்சலி அன்புக்கு இனியவர்,குடும்பத்துக்கு நல்ல தலைவர்.பிள்ளைகளுக்கு பாசமுள்ள ஐயா,மூதுார் மக்களுக்கு நல்ல மருத்துவர். தேடிச் சென்றவர்களுக்கு வரவேற்க சிறந்தவர்,நட்புடன் நன்மை... Read More
Gopalakrishnan Arumugam Canada 4 months ago
தமிழில் ஆயிரக் கணக்கான ,பிறர் மனம் நோகாமல்,அன்பைச் சொரியும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அன்பை அள்ளி வீசிய முழுத் தமிழ் சொற்களின் சொந்தக்காரன் யார் தெரியுமா? "பண்பாளர் " திரு.செல்லத்துரை... Read More
அன்புள்ளம் ஒன்று அமைதியாகி விட்டது. எங்கள் அன்புக்குரிய மாமா, மருத்துவர் கந்தையா செல்லத்துரை அவர்களின் திடீர் மறைவினால் ஆறாத்துயர் அடைந்துள்ளோம். உங்களின் அன்பான நினைவுகள் என்றும் எங்கள்... Read More

Summary

Photos