பிரசுரிப்பு
மலர்வு 18 JUN 1933
உதிர்வு 04 DEC 2018
டாக்டர் கந்தையா செல்லத்துரை ஓய்வுபெற்ற வைத்திய அதிகாரி- மூதூர்
பிறந்த இடம் அனலைதீவு
வாழ்ந்த இடம் திருகோணமலை
கந்தையா செல்லத்துரை 1933 - 2018 அனலைதீவு இலங்கை
Tribute 4 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்
மரண அறிவித்தல் யாழ். அனலைதீவைப் பிறப்பிடமாகவும், திருகோணமலையை வதிவிடமாகவும் கொண்ட கந்தையா செல்லத்துரை அவர்கள் 04-12-2018 செவ்வாய்க்கிழமை அன்று காலமானார்.

Photos

கண்ணீர் அஞ்சலிகள்

அன்புள்ளம் ஒன்று அமைதியாகி விட்டது. எங்கள் அன்புக்குரிய மாமா, மருத்துவர் கந்தையா செல்லத்துரை அவர்களின் திடீர் மறைவினால் ஆறாத்துயர் அடைந்துள்ளோம். உங்களின் அன்பான நினைவுகள் என்றும் எங்கள் நெஞ்சங்களில் நிறைந்து இருக்கும்.

எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.தங்கள் ஆத்ம சாந்திக்கும்,குடும்பத்தினரின் ஆத்மபலத்திற்கும் எம் இறைவனாம் ஐயனைப் பிரார்த்திக்கின்றோம்.
ஓம் சாந்தி! ஓம் சாந்தி!
ஓம் சாந்தி!

info@thuvafinanz.ch
+41793595564

தமிழில் ஆயிரக் கணக்கான ,பிறர் மனம் நோகாமல்,அன்பைச் சொரியும் தமிழ்ச் சொற்கள் இருக்கின்றன. அன்பை அள்ளி வீசிய முழுத் தமிழ் சொற்களின் சொந்தக்காரன் யார் தெரியுமா? "பண்பாளர் " திரு.செல்லத்துரை அவர்கள் தான்.அனலைதீவில் தோன்றிய மாணிக்கம். அவருடன் கொழும்பில் 2 நாட்கள் பழகியமை,இரண்டு வருடங்களுக்கு சமனானது. தேநீர் அருந்திய வேளையில் அவர் மற்றவர்களையும்,தன்னைப் போன்றே சமத்துவமாக அன்பைச் சொரிந்து வரவேற்றார்.அன்பு ஈனும் ஆர்வமுடமை அது ,ஈனும் நட்பு எனும் நாடாச் சிறப்பு " .வாழ்வில் என்ன நேசித்தவர்களே, இறப்பிலும் என்னை மறவாதிருங்கள் என்று விவிலியத்தில் சொல்லப்பட்டுள்ளது.விவிலியத்தின் வரிகளுக்கும், சிவபுராணத்தின் வரிகளுக்கும் நேர்மையாளனாக எம் மண்ணில் உதித்து ,மக்களுக்குச் சேவை செய்த எம் பெருமகனாரை தலை குனிந்து வணங்குகின்றேன். ஈன்ற பொழுதிற் பெரிது உவக்கும் தன் மகனை சான்றோன் எனக் கேட்ட தாய் எனும் வள்ளுவப் பெருந்தகையின் குறளுக்கு உயிர் கொடுத்த வைத்தியர் -இவ்வண்ணம் -கோபால் அனலைதீவு.

கண்ணீர் அஞ்சலி
அன்புக்கு இனியவர்,குடும்பத்துக்கு நல்ல தலைவர்.பிள்ளைகளுக்கு பாசமுள்ள ஐயா,மூதுார் மக்களுக்கு நல்ல மருத்துவர். தேடிச் சென்றவர்களுக்கு வரவேற்க சிறந்தவர்,நட்புடன் நன்மை செய்வதில் சோர்ந்து போகாதவர்,தனக்குரிய சிறப்பு பணிசெய்வதில் மாறதவர்.ஏழைகளுக்கு நல்தோழன்,எல்லாராலும் போற்றப்படுபவர். இத்தனையும் ஏற்ற மாமா என்ற மணிக்கம்.

உங்கள் பிரிவால் மனம் வருந்துகிறோம்.
என்றும் பாசமுள்ள அருள்குடும்பம்

Jeyaveerasingam India 1 week ago

எங்கள் குடும்ப சார்பில் ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.ஐயாவின் ஆத்ம சாந்திக்கும்,குடும்பத்தினரின் ஆத்மபலத்திற்கும் இறைவனை பிரார்த்திக்கின்றோம்.

Photos