1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 28 JAN 1967
இறப்பு 20 FEB 2020
அமரர் வைரமுத்து வசந்தன்
இறந்த வயது 53
வைரமுத்து வசந்தன் 1967 - 2020 கோண்டாவில் இலங்கை
Tribute 12 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். கோண்டாவில் தில்லையம்பதியைப் பிறப்பிடமாகவும், கனடாவை வதிவிடமாகவும் கொண்டிருந்த வைரமுத்து வசந்தன் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

ஆண்டுகள் ஒன்று ஆன போதிலும் நீங்களின்றிய
துயரங்கள் இன்னும் ஆறவில்லை அப்பா!!
எம்மை படைத்த எம் குலதெய்வமே
பணிகின்றோம் உங்கள் பாதம் தொட்டு

அன்பு பெருக அணைத்த கரங்களும்
நாம் ஆழ்ந்து உறங்கிய பாச மடியும்
இன்பம் தரும் தங்கள் இனியசொற்களும்
இன்றியே நாங்கள் இயல்பிழந்தோம் அப்பா!!

ஒரு வருடங்கள் உருண்ட போதிலும்
உங்களின் நினைவுகள் மனதில் ஓயாத அலைகளாய்
ஒவ்வொரு நாளும் ஏதோ ஓரிடத்தில் உங்களின் ஞாபகம்
அப்பா மீண்டும் வரமாட்டாரா என ஏங்குவோம் நாங்கள்!

உங்களின் மீதான எங்களின் தேடல்கள்
எங்கள் உயிர் மூச்சு உள்ளவரை ஓயாது!!!

என்றும் உங்கள் பசுமை நினைவுகளுடன்
மனைவி,பிள்ளைகள்....  

தகவல்: மனைவி, பிள்ளைகள்

தொடர்புகளுக்கு

விஜிதா - மனைவி

Summary

Photos

View Similar profiles