மரண அறிவித்தல்
மலர்வு 21 SEP 1928
உதிர்வு 22 MAR 2019
திருமதி பேசன் பராசக்தி
Midwife- மகப்பேறு மருத்துவமாது
வயது 90
பேசன் பராசக்தி 1928 - 2019 நெடுந்தீவு இலங்கை
Tribute 12 people tributed
உங்களுடைய கண்ணீர் அஞ்சலிகளை பகிருங்கள்

யாழ். நெடுந்தீவு மத்தியைப் பிறப்பிடமாகவும், சங்கானை அராலி வட்டுக்கோட்டை, திருநெல்வேலி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், தற்போது பிரான்ஸ் Choisy Le Roi ஐ வசிப்பிடமாகவும் கொண்ட பேசன் பராசக்தி அவர்கள் 22-03-2019 வெள்ளிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்ற விஸ்வநாதர், இலட்சுமி தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்ற சபாரட்ணம் பேசன், அழகசௌந்தரம் நைல்ஸ் தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற முருகேசு பேசன் அவர்களின் அன்பு மனைவியும்,

காலஞ்சென்ற ரவீந்திரராஜா(ரவி- பிரான்ஸ்), சிறீஸ்கந்தராஜா(பேசன் சிறி- பிரான்ஸ்), சிறிறஞ்சன்(கிச்சன்- வவுனியா), சாந்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

விஜயகுமாரி(விஜயா-பிரான்ஸ்), நிர்மலாதேவி(மலா- பிரான்ஸ்), தங்கராணி(ராணி- அதிபர் அண்ணாநகர் பரமேஷ்வரா வித்தியாலயம், வவுனியா), வேல்றஞ்சன்(பிரான்ஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான நடராஜா(செட்டிக்குளம்), வள்ளியம்மை(இராமநாதபுரம்), சின்னம்மா(நெடுந்தீவு மத்தி) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற நங்கி, கமலா(அவுஸ்திரேலியா), லீலா(கொழும்பு), அன்னப்பிள்ளை(செட்டிக்குளம்), காலஞ்சென்ற இராமநாதர், காலஞ்சென்ற கருணாநிதி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

சசீந்திரன் நிருபா(லண்டன்), சபேசன், சஞ்சயன், சதுர்ஜன், பிரகாஷ் அனுரூபா(அவுஸ்திரேலியா), றொசாந், சஞ்சித், மகிந், ஹரிசாந், வினோத் ஜானகி, விஜித், வேந்தன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,

றயன், ஜெடன், அஸ்டன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

விஜயா - மருமகள்
பேசன்சிறி - மகன்
சிறிறஞ்சன் - மகன்
ரஞ்சன், சாந்தி - மகள்
வினோத்
றொசாந்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos