1ம் ஆண்டு நினைவஞ்சலி
பிறப்பு 26 JAN 1983
இறப்பு 08 APR 2020
அமரர் கிருஷ்ணவேணி ஜெயகுமார்
இறந்த வயது 37
கிருஷ்ணவேணி ஜெயகுமார் 1983 - 2020 முல்லைத்தீவு இலங்கை
Tribute 24 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு 7ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரித்தானியா  Kent  ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கிருஷ்ணவேணி ஜெயகுமார் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.

எதிர்பார்க்கவில்லை உன் பிரிவை
வாழ்கின்றேன் உன் அரவணைப்பில்
தவிக்கின்றேன் உன் பிரிவால்
வாழ்கின்றேன் உன் நிழலாய்

கனவில் நீ வரும்பொழுது
தேடுகின்றேன் நீ வருவாய்யென்று
அது கனவென்று தெரிந்ததும்
கதறுகின்றேன் தனிமையாய்

கடைசிவரை இருப்பாய் என்று
மறந்து விட்டேன் வாழ்வை அன்று
கடந்து விட்டாய் என்னை விட்டு
என் கனவை உடைத்துவிட்டாய் மரணத்தால்

நீ எனைவிட்டுப்போய்
ஆண்டு ஒன்றானாலும்
உம் நினைவோடு
எங்கள் நாட்கள் கரைகிறதே..

உன் அன்பை நினைக்கையிலே
உணவும் சேறானது
எதை நினைத்து வாழ்ந்திட நான்
வருவாயா தினமும் நீ

உன் பிரிவால் வாடி நிற்கும்
குடும்பத்தினர்...!!!

தகவல்: குடும்பத்தினர்

Summary

Photos

View Similar profiles