நன்றி நவிலல்
திரு மடுத்தீன் பாக்கியநாதர் (பாக்கிய மாஸ்டர்) இளைப்பாறிய அதிபர் றோமன் கத்தோலிக்க பாடசாலை மண்டைதீவு பிறப்பு : 15 NOV 1919 - இறப்பு : 15 DEC 2019 (வயது 100)
பிறந்த இடம் மண்டைதீவு
வாழ்ந்த இடம் கனடா
மடுத்தீன் பாக்கியநாதர் 1919 - 2019 மண்டைதீவு இலங்கை
நன்றி நவிலல்

யாழ். மண்டைதீவைப் பிறப்பிடமாகவும், கனடாவை வசிப்பிடமாகவும் கொண்ட மடுத்தீன் பாக்கியநாதர் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.

31 நாள் ஆனாலும் ஆறமுடியவில்லை எம்மால்!
உங்களை நாம் இழந்த துயரை ஈடுசெய்ய
இயலாமல் தவிக்கின்றோம்!

அன்று எங்களது துன்பம் நீக்க
குடும்பத்தின் குல விளக்காய்
பாசத்தின் பிறப்பிடமாய் பண்பின் உறைவிடமாய்
வாழ்வின் வழிகாட்டியாய் எம்முடனே!
எமக்காகவே வாழ்ந்த எம் குலக்கொழுந்தே!

கருணையின் வடிவமே பண்பின் சிகரமே
உனது அன்பாலும் அரவணைப்பாலும்
உனது நித்திய சிரிப்பாலும் அடுத்தவர்களிற்கு கூறும்
ஆறுதல் வார்த்தைகளாலும் அனைவரையும் கவர்ந்தீரே!

உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!

அன்னாரின் மறைவுச்செய்தி கேட்டு எங்கள் இல்லங்களுக்கு வருகை தந்து எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், திருவுடல் பார்வைக்கு வைக்கப்பட்ட போது மலர்ச்சாலைக்கு வருகை தந்து இறுதி அஞ்சலி செலுத்தியவர்களுக்கும், இறுதிநிகழ்வில் கலந்து கொண்டவர்களுக்கும், அருட்சகோதரர், சகோதரிகளுக்கும், உலகின் பல பாகங்களிலுமிருந்து வருகை தந்தவர்கள் மற்றும் தொலைபேசி மூலமாகவும், சமூக வலைத்தளங்கள் ஊடாகவும் துயரத்தில் பங்கு கொண்ட உறவுகளுக்கும் மேலும் பல்வேறு வழிகளில் உதவி நின்ற அன்பான உறவுகள், நண்பர்கள், நண்பிகள் அனைவருக்கும் எமது குடும்பத்தின் சார்பில் நன்றிகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

31ம் நாள் நினைவுத்திருப்பலிகள்:

இலங்கையில்: 16-01-2020 வியாழக்கிழமை காலை 06:00 மணி மண்டைதீவு புனித பேதுருவானவர் ஆலயத்தில் நடைபெறும்.

கனடாவில்: 18-01-2020 சனிக்கிழமை காலை 11:00 மணி St Philip Neri Catholic Church, 2100 Jane St, North York, ON M3M 1A1, Canada எனும் முகவரியில் நடைபெறும்.

இங்ஙனம், குடும்பத்தினர் +14162451552
Tribute 11 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.